Published:Updated:

Doctor Vikatan: கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

heart disease
News
heart disease

கோவிட் பாதித்தவர்களுக்கு 'ப்ரோத்ராம்பாட்டிக் நிலை' ( prothrombotic state) எனப்படும் ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும் ரிஸ்க் சற்று அதிகம். இந்த ரத்தம் உறைதல் நிலையானது இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களிலும் ஏற்படலாம்.

Published:Updated:

Doctor Vikatan: கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

கோவிட் பாதித்தவர்களுக்கு 'ப்ரோத்ராம்பாட்டிக் நிலை' ( prothrombotic state) எனப்படும் ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும் ரிஸ்க் சற்று அதிகம். இந்த ரத்தம் உறைதல் நிலையானது இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களிலும் ஏற்படலாம்.

heart disease
News
heart disease

Doctor Vikatan: சமீப காலத்தில் ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதன் பின்னணி என்ன? கோவிட் பாதித்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்...

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் திடீரென அதிகரித்த விஷயமில்லை இது. கோவிட் தொற்றுக்கும், இதயநோய் பாதிப்புக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதயம் பாதிக்கப்படும் என்றும் சொல்லிவிட முடியாது.

ஆனால் கோவிட் பாதித்தவர்களுக்கு 'ப்ரோத்ராம்பாட்டிக் நிலை' (prothrombotic state ) எனப்படும் ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும் ரிஸ்க் சற்று அதிகம். இந்த ரத்தம் உறைதல் நிலையானது இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களிலும் ஏற்படலாம்.

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான முதல் காரணம் பரம்பரையாகத் தொடரும் அசாரண விஷயங்களாக இருக்கலாம். இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் எப்படி அதிகமோ, அதே போல இதயநோய் பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்பது துரதிர்ஷ்டமான உண்மை.

புகை மற்றும் மதுப்பழக்கங்கள், ஸ்ட்ரெஸ், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் இதயநோய்க்கான பிரதான காரணங்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இவையல்லாம் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் ரிஸ்க் காரணிகள்.

heart
heart

இதயத்தில் மூன்று முக்கியமான ரத்தக்குழாய்கள் இருக்கும். இதயத்தின் முன் பக்கம், இடது பக்கம் மற்றும் கீழ்ப்புறம் என இருக்கும் இந்த மூன்று ரத்தக் குழாய்களிலும் கொழுப்பு சேரலாம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்தாலும் குறிப்பிட்ட காலம்வரை அது எந்த அறிகுறியையும் காட்டாது.

இந்த அடைப்பு திடீரென தீவிரமாகி, 100 சதவிகிதத்தை எட்டும்போது ஹார்ட் அட்டாக் வருகிறது. இது யாருக்கு, எப்போது நிகழும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் குடும்பப் பின்னணியில் இதயநோய்கள் இருந்தாலோ, புகை, மதுப் பழக்கங்கள் இருந்தாலோ, ஸ்ட்ரெஸ் இருந்தாலோ அடிக்கடி இதயப் பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள். 40 வயதுக்கு மேலான எல்லோருமே வருடந்தோறும் இதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதயநோயின் அறிகுறி வலியாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. மார்பில் ஏதேனும் அசௌகர்யம், எரிச்சல் அல்லது நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு, மூச்சுத் திணறல், மார்பின் மையத்தில் அழுத்துதல், வியர்த்தல், வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Heart (Representational Image)
Heart (Representational Image)
Pixabay

'ஜிம்முக்கு போய் வொர்க் அவுட் செய்கிறேன்... எனக்கெல்லாம் ஹார்ட் அட்டாக்கே வராது' என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது தவறு. வொர்க் அவுட் செய்வது மட்டுமே இதயநலனைக் காக்காது. ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, புகை மற்றும் மதுப்பழக்கங்களை அறவே நிறுத்துதல், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சரிவிகித உணவுப்பழக்கம் போன்றவையும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.