Published:Updated:

Doctor Vikatan: குழந்தைக்கு அஜீரணக் கோளாறு... ஓம வாட்டர் கொடுக்கலாமா?

ஓம வாட்டர்
News
ஓம வாட்டர்

தரையில் கிடக்கும் எதையாவது எடுத்து குழந்தை தன் வாய்க்குள் போட்டுக்கொள்ளும். அதனால் குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ இருந்தால் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகினால் அவர், குழந்தைக்கான டயட் பற்றி விளக்குவார்.

Published:Updated:

Doctor Vikatan: குழந்தைக்கு அஜீரணக் கோளாறு... ஓம வாட்டர் கொடுக்கலாமா?

தரையில் கிடக்கும் எதையாவது எடுத்து குழந்தை தன் வாய்க்குள் போட்டுக்கொள்ளும். அதனால் குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ இருந்தால் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகினால் அவர், குழந்தைக்கான டயட் பற்றி விளக்குவார்.

ஓம வாட்டர்
News
ஓம வாட்டர்

தவழ ஆரம்பிக்கும் குழந்தை, தரையில் கிடக்கும் கண்டதையும் வாயில் வைத்துக்கொள்கிறது. இதனால் அடிக்கடி அதற்கு அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு வருகிறது. குழந்தைக்கு அஜீரணம் ஏற்படும்போது எப்படிப்பட்ட உணவுகளைத் தர வேண்டும்? ஓம வாட்டர் தரலாமா?

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்...

சின்ன குழந்தைகள் இருக்கும் வீடுகளை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். அதிலும் தவழும் வயதில் உள்ள குழந்தைகள் இருந்தால் கூடுதல் கவனத்துடன் வீட்டைப் பராமரிக்க வேண்டும்.

baby
baby

குழந்தையை தரையில் தவழ அனுமதிப்பதற்கு முன், அந்தப் பகுதி சுத்தமாக இருக்கிறதா, தேவையற்ற பொருள்கள் ஏதும் தரையில் கிடக்கின்றனவா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.

தவழும் குழந்தைகள் நம் கவனத்தையும் மீறி சில நேரங்களில் தரையில் கிடக்கும் எதையாவது எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்வது பல வீடுகளில் நடக்கும். அதனால் அந்தக் குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ இருந்தால் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகினால் அவர், குழந்தைக்கான டயட் பற்றி விளக்குவார்.

தவழும் வயது என்பதால் அனேகமாக நீங்கள் குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள். எனவே, மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் பரிந்துரைக்கும் உணவுகளைக் கொடுங்கள்.

baby
baby

ஓம வாட்டர் கொடுப்பது குறித்து உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறார் என்பது முக்கியம். அவர் கொடுக்கச் சொன்னால் மட்டும் கொடுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி அதைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.