Published:Updated:

Doctor Vikatan: வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

வலிப்பு
News
வலிப்பு ( pixabay )

இவர்கள் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை மிஸ் செய்யவே கூடாது. தூக்கம் இல்லாவிட்டால் வலிப்பு வரலாம். பட்டினி இருந்தால் வலிப்பு வரலாம். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

Published:Updated:

Doctor Vikatan: வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

இவர்கள் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை மிஸ் செய்யவே கூடாது. தூக்கம் இல்லாவிட்டால் வலிப்பு வரலாம். பட்டினி இருந்தால் வலிப்பு வரலாம். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு
News
வலிப்பு ( pixabay )

Doctor Vikatan: அடிக்கடி வலிப்பு வருபவர்கள் வெளியே செல்லும்போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை
நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை

அடிக்கடி வலிப்பு வரும் என்று தெரிந்தவர்கள், மருத்துவரின் ஆலோசனையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே, பயமின்றி வாழலாம். அதே நேரம் இவர்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

இவர்கள் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை மிஸ் செய்யவே கூடாது. தூக்கம் இல்லாவிட்டால் வலிப்பு வரலாம். பட்டினி இருந்தால் வலிப்பு வரலாம். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, முற்பகல் 11 மணி முதல், மதியம் 3 மணி வரையிலான வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும்போது, அதுவே இவர்களுக்கு வலிப்பைத் தூண்டும் காரணியாக அமையலாம்.

எந்நேரமும் போன், டேப்லட், வீடியோ கேம்ஸ் என இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வெளிப்படும் ஃபிளாஷிங் லைட்டுகள் வலிப்பைத் தூண்டிவிடக்கூடும். வலிப்பு பாதிப்பு உள்ளவர்கள், அசையும் இயந்திரங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.

உயரமான இடங்களில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரின் அருகில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் என்றால் சின்ன பேசின் அளவு தண்ணீர்கூட இவர்களுக்கு ஆபத்தானதுதான். வலிப்பு வரும்போது அந்தத் தண்ணீரில் விழுந்தால்கூட மூச்சு நின்றுபோய், உயிருக்கே ஆபத்தாகலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வலிப்பு
வலிப்பு

மற்றபடி இவர்களும் சாதாரண வேலைகளைச் செய்யலாம். வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம், குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். எல்லோரையும்போல சராசரி வாழ்க்கையை வாழலாம்.

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்புநோய்க்கு மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. நம்பிக்கையை இழக்காமல் தரமான சிகிச்சையை மேற்கொண்டாலே நல்லதொரு வாழ்க்கை இவர்களுக்கும் சாத்தியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.