Published:Updated:

Doctor Vikatan: வெயில் பட்டாலே சிவந்து, தடித்துப்போகும் சருமம்-சூரியஒளி கூடவா அலர்ஜியை ஏற்படுத்தும்?

அலர்ஜி
News
அலர்ஜி

சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தெர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

Doctor Vikatan: வெயில் பட்டாலே சிவந்து, தடித்துப்போகும் சருமம்-சூரியஒளி கூடவா அலர்ஜியை ஏற்படுத்தும்?

சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தெர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

Published:Updated:
அலர்ஜி
News
அலர்ஜி

என் வயது 29. எனக்கு வெயில் என்றாலே அலர்ஜி. சில நிமிடங்கள் வெயிலில் சென்று வந்தாலே சருமத்தில் தடிப்புகளும் கட்டிகளும் வருகின்றன. கூடியவரையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கிறேன் அல்லது உடல் முழுவதும் மூடியபடி செல்கிறேன். வெயில் கூடவா சரும அலர்ஜியை ஏற்படுத்தும்?

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer


நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருப்பது `போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Photocontact dermatitis) என்ற பிரச்னையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

சூரிய வெளிச்சமும், யுவி கதிர்களும் சருமத்தில் பட்டு, அதன் விளைவாக ஏற்படுகிற ஒவ்வாமை இது. சிவந்த நிறத் தடிப்புகள், செதில் செதிலான தோற்றம், சின்னச் சின்ன கட்டிகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

sunlight
sunlight

நீங்கள் உங்கள் சருமத்தில் ஏதேனும் க்ரீம், லோஷன், அழகு சாதனங்களைப் பயன்படுத்திவிட்டு வெயிலில் செல்லும்போது, அந்தப் பொருள்களிலுள்ள கெமிக்கல், சூரிய வெளிச்சம் பட்டு, அலர்ஜிக்கு காரணமாகலாம்.

இது `போட்டோ கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' தானா என்பதை முதலில் சரும மருத்துவரிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிய ரத்தப் பரிசோதனையோ, பேட்ச் டெஸ்ட்டோ செய்யப் பரிந்துரைப்பார். அலர்ஜிக்கான காரணம் தெளிவாகத் தெரிந்ததும், அதற்கேற்ப சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

மிகவும் குறைந்த அளவு ஒவ்வாமை என்றால், ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். பிளெயின் கேலமைன் லோஷன் தடவலாம். அரிப்பும் எரிச்சலும், சிவந்து போதலும் அதிகமானால், மருத்துவரிடம் கேட்டு, அதற்கான ஆயின்மென்ட் மற்றும் ஆன்ட்டி ஹிஸ்டமைன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

முடிந்தவரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக, முற்பகல்11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். பெரும்பாலான சன் ஸ்கிரீன் கிரீம் மற்றும் லோஷன்களில் பிஏபிஏ என்கிற கெமிக்கல் இருக்கும்.

Skincare products
Skincare products

சூரிய வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்படுகிறவர்கள், அதைத் தவிர்க்க வேண்டும். பிஏபிஏ கலப்பில்லாத சன் ஸ்கிரீனை கவனமாகத் தெர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். சருமம் முழுவதும் மறைகிற மாதிரி உடையும், தலைக்குத் தொப்பியும் அணிவது பாதுகாப்பானது.

சிலவித சத்துக் குறைபாடுகள் கூட ஒவ்வாமைக்கு காரணமாகலாம். அதைத் தெரிந்துகொண்டு, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸும், வைட்டமின் ஏ, சி, இ, டி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மருந்துகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம். சுய மருத்துவம் தவிர்த்து, சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.