Published:Updated:

Doctor Vikatan: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது எடையைக் குறைக்க உதவுமா?

நடைபயிற்சி
News
நடைபயிற்சி

நடக்க வேண்டுமே என கடமைக்காக நடக்க வேண்டாம். இப்போதுதான் முதல்முறை வாக்கிங் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது எடையைக் குறைக்க உதவுமா?

நடக்க வேண்டுமே என கடமைக்காக நடக்க வேண்டாம். இப்போதுதான் முதல்முறை வாக்கிங் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம்.

நடைபயிற்சி
News
நடைபயிற்சி

Doctor Vikatan: தினமும் 10,000 அடிகள் நடப்பது எடையைக் குறைக்க உதவுமா? வாக்கிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஏதும் இருக்கின்றனவா? பேசிக்கொண்டே நடப்பது தவறானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா

ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை
ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா | சென்னை

வாக்கிங் செய்யவும் முறையான ஷூக்களை அணிய வேண்டியது அவசியம். தீவிரமான வாக்கிங் பயிற்சி செய்யப்போவதென முடிவுசெய்துவிட்டால், அதற்கேற்ப சரியான அளவில், சரியான குதிகால் சப்போர்ட் உள்ள ஷூக்களுக்கு செலவு செய்துதான் ஆக வேண்டும்.

தளர்வான உடை அணிந்திருக்க வேண்டும். வாக்கிங் செல்லும்போது தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். பகல் வேளையில் வாக்கிங் செல்பவர் என்றால் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். வாக்கிங் செய்யும்போதான உங்கள் உடல் பொசிஷனும் முக்கியம். நேராகப் பார்த்தபடி உடலை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது குதிகால்களிலிருந்து விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

மற்றபடி நடக்க வேண்டுமே என கடமைக்காக நடக்க வேண்டாம். தனியே நடக்க போரடித்தால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கலாம்.

இப்போதுதான் முதல்முறை வாக்கிங் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். முதல்நாளே ஒரு மணி நேரம் வாக்கிங் செய்ய நினைக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அடுத்தநாளே களைப்பாகி, கால்வலியால் வாக்கிங் செல்ல மாட்டீர்கள்.

10,000 அடிகள் வாக்கிங் என்பது சமீப காலத்தில் டிரெண்டான விஷயமாகவே இருக்கிறது. தினமும் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை ஆக்டிவ்வான நபர் என்கிறது ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறை. ஆனால் எல்லோராலும் ஒரேயடியாக பத்தாயிரம் அடிகள் நடக்க முடியாது. ஆரம்பத்தில் 5 ஆயிரம் அடிகள் நடக்கலாம். பிறகு 9 ஆயிரம், அடுத்து பத்தாயிரம், அதற்கும் அதிகமாக என மெள்ள மெள்ள அதிகப்படுத்தலாம். 12,500 அடிகளுக்கு மேல் நடப்பவர்களை சூப்பர் ஆக்டிவ் நபர்கள் என்கிறோம்.

உடல் எடை
உடல் எடை

வாக்கிங் செய்தாலே எடையைக் குறைக்கலாம். ஆனால் உங்களுடைய இலக்கை வெறும் எடைக்குறைப்போடு நிறுத்திக்கொள்ளாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கானதாகவும் விரிவுபடுத்தினால்தான் உடல் உறுதியாகும். அதற்கு வாக்கிங் செய்வதோடு, வேறு சில பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.