Published:Updated:

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

medicines
News
medicines

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்துவைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

Published:Updated:

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்துவைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

medicines
News
medicines

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்
இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்

வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும் உபயோகிக்கவே கூடாது.

நாமாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் தவறானது. அப்படி நாமாக வாங்கி வீட்டில் சேகரித்து வைக்கும் மருந்துகளை வீட்டிலுள்ள யாரும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

உதாரணத்துக்கு சின்னச்சின்ன பிரச்னைகளுக்குக் கூட உடனே பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலருக்கும் உண்டு. அப்படித் தேவைக்கதிகமாகவும் அடிக்கடியும் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே காய்ச்சலுக்கோ, வலி நிவாரணத்துக்கோ, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது சரியானதே அல்ல. இப்படி நம் நாட்டில், நமக்குப் பழக்கமான மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவதே ஆபத்தானது என்கிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது.

மாத்திரை
மாத்திரை

எனவே வெளிநாட்டுப் பொருள்களில் பலருக்கும் உள்ள மோகத்தை மருந்து விஷயத்திலும் காட்ட வேண்டாம். அந்த மருந்துகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. ஒருவருக்கு காய்ச்சலோ, உடல்வலியோ ஏற்படும்போது அதற்கான காரணம் தெரியாமல் மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவது தவறானது. இந்நிலையில் அவற்றுக்கு வெளிநாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதென்பது இன்னும் ஆபத்தானது. எனவே இதைத் தவிர்க்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.