Published:Updated:

Doctor Vikatan: பிரசவத் தேதியைத் துல்லியமாகக் கணக்கிட முடியுமா?

பிரசவம்
News
பிரசவம்

பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele's formula என்று பெயர்.

Published:Updated:

Doctor Vikatan: பிரசவத் தேதியைத் துல்லியமாகக் கணக்கிட முடியுமா?

பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele's formula என்று பெயர்.

பிரசவம்
News
பிரசவம்

Doctor Vikatan: எனக்கு கர்ப்பம் உறுதியாகி இருக்கிறது. பிரசவத் தேதியை என்னால் உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியுமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி என்பது என்ன என்று முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கர்ப்பத்தின் 40 வார காலம் முடிவடைவதை, அதாவது தோராயமாக 280 நாள்கள் முடிவடைவதையே பிரசவமாகும் என எதிர்பார்க்கப்படும் தேதியாகக் கணக்கிடப்படும்.

இது தோராயமான கணக்குதானே தவிர, உறுதியான தேதி இல்லை. வெறும் 4 சதவிகிதம் பேருக்குதான் அப்படி அதே தேதியில் பிரசவமாகும். பலருக்கும் 37 - 42 வாரங்களில் பிரசவமாவது சகஜம்.

ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து, முன்கூட்டியே பிரசவம் நடக்க வேண்டும் என உங்கள் மருத்துவர் வலியுறுத்தலாம். பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele's formula என்று பெயர். கடைசியாக வந்த பீரியட்ஸின் முதல் நாளை எடுத்துக் கொள்ளவும். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்துவிட்டு, ஒரு வருடம், ஏழு நாள்களைச் சேர்க்க வேண்டும்.

கர்ப்பிணி
கர்ப்பிணி
Freepik

உதாரணத்துக்கு, உங்களுடைய கடைசி பீரியட்ஸின் முதல் நாள் டிசம்பர் 1, 2022 என வைத்துக் கொள்வோம். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்தால் வருவது செப்டம்பர் 1, 2022. அத்துடன் ஒரு வருடம், ஏழு நாள்களைக் கூட்டினால் வருவது, செப்டம்பர் 8, 2023.

மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருப்பவர்களுக்கு இந்த ஃபார்முலா உதவாது. இப்படிப்பட்டவர்களுக்கு டேட்டிங் ஸ்கேன் உதவியோடு பிரசவத் தேதியை மருத்துவர் கணித்துச் சொல்வார். இதை, முதல் ட்ரைமெஸ்டரில் செய்வதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.