Published:Updated:

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா?

workout
News
workout

சரியான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம், தவறான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது.

Published:Updated:

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா?

சரியான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம், தவறான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது.

workout
News
workout

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட், வாக்கிங் செய்யலாமா? வொர்க் அவுட் செய்யும் முன்பும், செய்த பிறகும் சாப்பிட வேண்டிய விஷயங்கள், பற்றி சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் வண்டி இயங்குமோ, அதுபோல உடல் இயக்கத்துக்கும் எரிபொருள் அவசியம்.

எனவே வாக்கிங், ஜிம்மில் செய்கிற வொர்க் அவுட் என எதுவாக இருந்தாலும் நீங்கள் செய்கிற உடற்பயிற்சிகளைப் பொறுத்து உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடுமையான வொர்க் அவுட் செய்பவர் என்றால் வொர்க் அவுட்டை ஆரம்பிக்கும் முன்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சிக்கு முன்பும் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகும் என இரண்டுக்குமே புரதச்சத்து மிக அவசியம். அந்த வகையில் வொர்க் அவுட்டை தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப்பழம், பீநட் பட்டர் தடவிய பிரவுன் பிரெட் ஸ்லைஸ் ஒன்று, சிறிது நட்ஸ், அரை ஆப்பிள், பால் சேர்க்காத பிளாக் காபி என இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

 Exercise
Exercise

வொர்க் அவுட் செய்து முடித்த நிலையில் நம் தசைகள் பலமிழந்து இருக்கும். தசையிழப்பிலிருந்து மீட்டு, தசைகளை வளரச் செய்ய புரதச்சத்து மிக அவசியம். எதுவுமே சாப்பிடாமல் உங்களால் கடுமையான பயிற்சிகளைச் செய்யவே முடியாது.

சரியான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம், தவறான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது.

உதாரணத்துக்கு பால், பால் சேர்த்த காபி, டீ போன்றவற்றை எடுத்துக்கொண்டு வொர்க் அவுட் செய்தால் அது எதுக்களித்து வருவதைப் போல உணரச் செய்யும். காரமான உணவுகள், தோசை , மசாலா சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டதும் வொர்க் அவுட் செய்யக்கூடாது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

எனவே நீங்கள் செய்கிற உடற்பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து வொர்க் அவுட் செய்து முடித்ததும் நல்ல புரத உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் தசைகளைத் தளரவிடாமல் காக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.