Published:Updated:

Doctor Vikatan: 30 வருடங்களாகத் தொடரும் சிகரெட் பழக்கம்... இதுவரை இல்லாத பிரச்னை இனி வருமா?

சிகரெட் பழக்கம்
News
சிகரெட் பழக்கம்

புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதை நிறுத்த நேரம், காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், இன்றிலிருந்தே அதை நிறுத்த வேண்டும். நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்திய அந்த நாள் முதலே உங்களுடைய இதயம், நுரையீரல் உளபட உடலின் அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளும் குறையத் தொடங்கும்.

Published:Updated:

Doctor Vikatan: 30 வருடங்களாகத் தொடரும் சிகரெட் பழக்கம்... இதுவரை இல்லாத பிரச்னை இனி வருமா?

புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதை நிறுத்த நேரம், காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், இன்றிலிருந்தே அதை நிறுத்த வேண்டும். நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்திய அந்த நாள் முதலே உங்களுடைய இதயம், நுரையீரல் உளபட உடலின் அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளும் குறையத் தொடங்கும்.

சிகரெட் பழக்கம்
News
சிகரெட் பழக்கம்

Doctor Vikatan: என் வயது 52. எனக்கு 30 வருடங்களாகப் புகைப்பழக்கம் இருக்கிறது. பலமுறை அதிலிருந்து விடுபட நினைத்து முடியாமல் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு உடல்நல பிரச்னை எதுவும் வரவில்லை. அப்படியானால் சிகரெட் பழக்கம் என்னை எதுவும் செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலாமா... இனிமேல் பிரச்னை வர வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி
நுரையீரல் மருத்துவர் திருப்பதி

உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்களே ஓர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ள நினைத்தால், உங்களுக்குப் புகைப்பழக்கம் இருக்கும்பட்சத்தில அதை நிறுத்துவதுதான் ஆகச் சிறந்த அன்பளிப்பாக இருக்கும். புகைப்பழக்கம் என்பது, தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது.

நோய் எதிர்ப்புத்திறன் குறைவதில் தொடங்கி, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய் (Chronic obstructive pulmonary disease (COPD)  என பலவித பிரச்னைகளுக்கு புகைப்பழக்கம் காரணமாகலாம். 'நான் சிகரெட்டை விட்டு பத்து வருஷமாச்சு டாக்டர்... ஆனாலும் இன்னும் மூச்சு விடறதுல இருந்த பிரச்னை சரியாகவே இல்லை' என சொல்லிக்கொண்டு வரும் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பானது, ஒரு கட்டத்தில் தீவிரமாகிவிட்டால், புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகும் நோய் பாதிப்பை அவ்வளவு எளிதில் குணப்படுத்திவிட முடியாது.

எனவே புகைப்பழக்கம் உள்ளவர்கள், அதை நிறுத்த நேரம், காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், இன்றிலிருந்தே அதை நிறுத்த வேண்டும். நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்திய அந்த நாள் முதலே உங்களுடைய இதயம், நுரையீரல் உளபட உடலின் அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளும் குறையத் தொடங்கும்.

நுரையீரல் பாதிப்பு
நுரையீரல் பாதிப்பு

எவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் புகைப்பழக்கத்தை நிறுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அது பிற்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே இத்தனை வருடங்கள் புகைப்பழக்கம் இருந்ததை நினைத்து, இனிமேல் என்ன ஆகிவிடப் போகிறது என அலட்சியப்படுத்தால், இன்றே அதிலிருந்து முழுமையாக வெளியே வாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.