Published:Updated:

Doctor Vikatan: வெயில் காலத்தில் அதிகரிக்கும் பொடுகு; கூடவே சேர்ந்துகொள்ளும் அரிப்பு... தீர்வு என்ன?

பொடுகு
News
பொடுகு

வெந்நீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். அது கூந்தல் வறட்சியை அதிகப்படுத்தும். மண்டைப்பகுதி வறட்சி அதிகரிக்கும்போது, அது பொடுகுத் தொல்லையை மேலும் தீவிரப்படுத்தும்.

Doctor Vikatan: என் வயது 28. வெயில் காலம் வந்தாலே கூடவே பொடுகுத் தொல்லையும் சேர்ந்து கொள்கிறது. அரிப்பும் இருக்கிறது. எப்போதும் தலையைச் சொறிந்தபடியே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. இதிலிருந்து விடுபட என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

வெயில் என்றாலே வியர்வையைத் தவிர்க்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். வழக்கத்தைவிட அதிக வியர்வை, பூஞ்சைத்தொற்று உள்ளிட்ட கிருமிப் பெருக்கத்துக்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தரும். அதன் காரணமாக பொடுகுத்தொல்லை ஏற்படும், கூடவே அரிப்பும் சேர்ந்துகொள்ளும்.

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, அடிக்கடி தலைக்குக் குளியுங்கள். அதிக வியர்வை உள்ள ஆண்களும் பெண்களும் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது மாய்ஸ்ச்சரைசர் ஷாம்பூ உபயோகிக்கவும். அது கூந்தலை வறண்டு போகாமல் காக்கும்.

வெந்நீரில் தலைக்குக் குளிக்க வேண்டாம். அது கூந்தல் வறட்சியை அதிகப்படுத்தும். மண்டைப்பகுதி வறட்சி அதிகரிக்கும்போது, அது பொடுகுத் தொல்லையை மேலும் தீவிரப்படுத்தும்.

அந்தக் காலத்தில் வலியுறுத்தபபட்ட எண்ணெய்க் குளியலை அலட்சியமாகக் கருத வேண்டாம். எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப்பது மண்டைப் பகுதியையும் முடியையும் வறட்சியின்றி வைப்பதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கூந்தல்
கூந்தல்

வெயிலில் டூ வீலர் ஓட்டுகிறீர்கள் என்றால் தலையை சுத்தமான காட்டன் துணியால் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல்மெட் உபயோகியுங்கள். இதன் மூலம் வியர்வை உறிஞ்சப்படும். அழுக்கும் மாசும் சேர்ந்து, பொடுகு உருவாவது தடுக்கப்படும். இப்படி தலைக்கு உபயோகிக்கும் துணியை ஒவ்வொரு நாளும் மாற்றிவிட வேண்டும். கூந்தலை எந்த அளவுக்கு சுத்தமாகப் பராமரிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.