Published:Updated:

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருமை... நிரந்தரமாகப் போக்க வழிகள் உண்டா?

அக்குள்
News
அக்குள்

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட `க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா' என்றெல்லாம் பலரும் கேட்பார்கள். உண்மையில் அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான்.

Published:Updated:

Doctor Vikatan: அக்குள் மற்றும் கழுத்துப் பகுதி கருமை... நிரந்தரமாகப் போக்க வழிகள் உண்டா?

இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட `க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா' என்றெல்லாம் பலரும் கேட்பார்கள். உண்மையில் அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான்.

அக்குள்
News
அக்குள்

Doctor Vikatan: அக்குள் பகுதி, கழுத்து ஆகிய பகுதிகளில் கருமையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதைப் போக்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

நிறைய பேர் இந்தப் பிரச்னையுடன் வருவதைப் பார்க்கிறேன். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சொல்பவர்கள் அதிகம். கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படுவதாக நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் அழுக்கு என்றும் நினைத்துக்கொண்டு மிகவும் ஆக்ரோஷமாகத் தேய்த்துக் கழுவுவதையெல்லாம் செய்கிறார்கள்.

இந்தக் கருமை பிரச்னைக்கான காரணம், அழுக்கோ, சங்கிலி அணிவதோ இல்லை. சருமம் திக் ஆவதுதான் காரணம். இதை `அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' (Acanthosis nigricans) என்று சொல்வோம். சருமம் திக் ஆவதால் அந்தப் பகுதியில் நிறமும் மாறுகிறது.

சிலருக்கு இது `ப்ரீ டயாபட்டீஸ்', அதாவது நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். அப்படியானால் குழந்தைகளுக்கும் இது நீரிழிவு வரப்போவதன் அறிகுறியா என்றால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர வேண்டும்.

வாழ்க்கைமுறை சரியில்லாதவர்களுக்கே இந்தப் பிரச்னை பெரிதும் பாதிக்கும். உதாரணத்துக்கு அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாகப் பாதிப்பதைப் பார்க்கலாம்.

இந்த பிரச்னையிலிருந்து விடுபட `க்ரீம் போடலாமா, பீல் சிகிச்சை செய்யலாமா' என்றெல்லாம் பலரும் கேட்பார்கள். உண்மையில் அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடும்போதும், அதிகப்படியான எடையைக் குறைக்கும்போதும் இந்தப் பாதிப்பு குறைவதுடன், சரும நிறம் இரண்டு, மூன்று ஷேடுகள் அதிகரிப்பதையும் பார்க்கலாம்.

dark underarm removal
dark underarm removal

கழுத்து, முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், முகம், நெற்றி போன்ற இடங்களிலும் இந்த பாதிப்பு வரலாம். அதிக மாவுச்சத்தும், இனிப்பும் உள்ள உணவுகளைக் குறைத்து, நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடப் பழக வேண்டும்.

குழந்தைகளுக்கு காலை முதல், இரவு வரை ஆக்டிவ்வாக இருக்கும் விஷயங்களைப் பழக்க வேண்டும். பெரியவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் மேல்பூச்சுக்கான சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். இரண்டையும் சேர்த்துப் பின்பற்றும்போது நல்ல பலன் தெரியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.