Published:Updated:

Doctor Vikatan: பல்லி எச்சம் பட்டால் வாயில் புண் வருமா?

பல்லி
News
பல்லி

பல்லியின் எச்சத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தவகையான வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. இதற்கு முறைப்படி சிகிச்சைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

Published:Updated:

Doctor Vikatan: பல்லி எச்சம் பட்டால் வாயில் புண் வருமா?

பல்லியின் எச்சத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தவகையான வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. இதற்கு முறைப்படி சிகிச்சைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

பல்லி
News
பல்லி

Doctor Vikatan: பல்லியின் எச்சம் முகத்தின்மீது விழுந்தால் புண் உருவாகுமா? அதற்கு எப்படிப்பட்ட சிகிச்சைகள் தேவைப்படும்?

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பலரும் இந்தப் பிரச்னையை பல்லியின் எச்சம் விழுந்ததால் உண்டான புண் என்றே தவறாக நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். உண்மையில் அது பல்லியின் எச்சத்தால் ஏற்படுவது இல்லை.

நீங்கள் குறிப்பிடுவது ஒருவகையான வைரஸ் தொற்று. தமிழில் அதை `அக்கி' என்று சொல்கிறோம். பல்லியின் எச்சத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்த வகையான வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. இதற்கு முறைப்படி சிகிச்சைகள் எடுக்க வேண்டியது அவசியம். உடனடியாக சருமநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இந்த அறிகுறியானது சிலருக்கு உதடுகளின் அருகில் வரலாம். சிலருக்கு உடலில் வரலாம். சிலருக்கு இந்த அக்கி பாதிப்பானது ரொம்பவே தீவிரமாக இருக்கும். பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இதுபோன்று தீவிரமாக இருக்கும்.

எச்சத்தால் புண்
எச்சத்தால் புண்

புள்ளிப் புள்ளியாக, ஒன்று சேர்ந்தது போலவும், உள்ளே நீர் கோத்தும் காணப்படும். பெரும்பாலும் வாயின் அருகில்தான் இது வரும். மருத்துவத்தில் இதை ஹெர்பிஸ் லேபியாலிஸ் (Herpes labialis) என்று குறிப்பிடுவோம்.

அறிகுறி தெரிந்ததும் அலட்சியம் செய்யாமல் உடனே சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுப்பதுதான் இதற்கான தீர்வு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.