Published:Updated:

Doctor Vikatan: கடைகளில் கிடைக்கும் டியூப் மருந்து கண் வலிக்கு நிவாரணம் தருமா?

கண்
News
கண்

கண்களில் ஏற்படும் தொற்று என்பது பாக்டீரியாவினாலும் வரலாம், வைரஸாலும் வரலாம். எனவே கண்களில் சிவப்பு, அரிப்பு, தொற்று என எந்தப் பிரச்னை வந்தாலும் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.

Published:Updated:

Doctor Vikatan: கடைகளில் கிடைக்கும் டியூப் மருந்து கண் வலிக்கு நிவாரணம் தருமா?

கண்களில் ஏற்படும் தொற்று என்பது பாக்டீரியாவினாலும் வரலாம், வைரஸாலும் வரலாம். எனவே கண்களில் சிவப்பு, அரிப்பு, தொற்று என எந்தப் பிரச்னை வந்தாலும் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.

கண்
News
கண்

Doctor Vikatan: கண்கள் சிவந்தாலோ, மெட்ராஸ் ஐ வந்தாலோ மருந்துக் கடைகளில் கிடைக்கும் கேப்ஸ்யூல் மாத்திரையை வாங்கி, அதனுள் உள்ள மருந்தை கண்களில் விட்டுக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. இது என்ன மருந்து? அதைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண்கள் சிவந்தாலோ, மெட்ராஸ் எனப்படும் தொற்று வந்தாலோ, தாமாக மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி கண்களில் போட்டுக் கொள்ளும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்கிறது. அந்த மருந்துக்கு 'குளோரோமைசெட்டின் அப்ளிகேப்ஸ்' (Chloromycetin applicaps) என்று பெயர்.

பாக்டீரியாவால் ஏற்படும் 'கன்ஜன்க்டிவைட்டிஸ்' தொற்றுக்கு முன்பு இது ஒரு சிகிச்சையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது அடினோ வைரஸால் ஏற்படும் 'கன்ஜன்க்டிவைட்டிஸ்' தொற்றும் காணப்படுகிறது.

கண்களில் ஏற்படும் தொற்று என்பது பாக்டீரியாவினாலும் வரலாம், வைரஸாலும் வரலாம். எனவே கண்களில் சிவப்பு, அரிப்பு, தொற்று என எந்தப் பிரச்னை வந்தாலும் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது. வைரஸால் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனுக்கு பாக்டீரியாவுக்கான மருந்தைப் பயன்படுத்தினால் தொற்றின் தீவிரம் இன்னும் மோசமாகுமே தவிர குணமாகாது.

எனவே அந்தப் பிரச்னைக்கு ஆன்டிவைரல் மருந்து தேவையா, ஸ்டீராய்டு மருந்து தேவையா என்பதை மருத்துவரால்தான் முடிவு செய்ய முடியும். சமீப காலங்களில் கண்களில் வரும் தொற்று விதம் விதமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

கண்
கண்

முன்பெல்லாம் மெட்ராஸ் தொற்றானது இரண்டு, மூன்று நாள்களில் குணமாகிவிடும். ஆனால் இப்போது வரும் தொற்றானது இரண்டு வாரங்கள் வரைகூட நீடிக்கிறது.

எனவே கண்கள் விஷயத்தில் துளியும் அலட்சியம் வேண்டாம். மருத்துவரைப் பார்க்க அலுப்புப்பட்டுக் கொண்டு கடைகளில் கிடைக்கும் டியூப் மருந்தை வாங்கிக் கண்களில் விட்டுக்கொள்ளாதீர்கள். அது ஆபத்தானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.