Published:Updated:

Doctor Vikatan: ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் - அலர்ஜியிலிருந்து விடுபட வழி உண்டா?

ஹேர் டை
News
ஹேர் டை ( freepik )

பலருக்கும் பல காரணங்களால் ஒவ்வாமைக்கான காரணியை அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாததாக இருக்கலாம். சிலருக்கு மகரந்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், வேறு சிலருக்கு காளான்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

Published:Updated:

Doctor Vikatan: ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் - அலர்ஜியிலிருந்து விடுபட வழி உண்டா?

பலருக்கும் பல காரணங்களால் ஒவ்வாமைக்கான காரணியை அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாததாக இருக்கலாம். சிலருக்கு மகரந்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், வேறு சிலருக்கு காளான்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

ஹேர் டை
News
ஹேர் டை ( freepik )

Doctor Vikatan: எனக்கு ஹேர் டை அலர்ஜி இருக்கிறது. டை உபயோகிக்கும் நாள்களில் கண்களில் எரிச்சலும், நீர் வடிதலும் இருக்கிறது. டை உபயோகிப்பதைத் தவிர்க்க முடியாத வேலையில் இருக்கிறேன். இந்த பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

எந்தவிதமான ஒவ்வாமைக்கும் ஒரே தீர்வு, அந்த ஒவ்வாமைக்கான காரணியைக் கண்டறிந்து அதை அறவே தவிர்ப்பதுதான். அது உணவாக இருந்தாலும், தொழில் சம்பந்தப்பட்ட பொருள்களாக இருந்தாலும், நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அழகுசாதனங்கள் தொடர்பானதாக இருந்தாலும் அலர்ஜிக்கு காரணமான விஷயத்தைத் தவிர்ப்பதுதான் தீர்வு.

ஆனால், பலருக்கும் பல காரணங்களால் ஒவ்வாமைக்கான காரணியை அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாததாக இருக்கலாம். சிலருக்கு மகரந்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், வேறு சிலருக்கு காளான்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று... சில சூழல்களில் அவற்றைத் தவிர்ப்பது இயலாமல் போகலாம். எனவே, அந்த அலர்ஜி ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து மீள, தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அலர்ஜியைக் கட்டுப்படுத்த மிக பாதுகாப்பான, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அலர்ஜியால் கண்களில் எரிச்சலும் அரிப்பும் இருந்தால், அதற்கான டிராப்ஸ் பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரையோடு Anti histamine டிராப்ஸ் பயன்படுத்தலாம்.

கண்களில் எரிச்சலும் வீக்கமும் அதிகமாகி, கண்கள் வீங்கி, பொங்கினால், மருத்துவரின் ஆலோசனையோடு ஸ்டீராய்டு கலந்த ஐ டிராப்ஸ் பயன்படுத்தலாம். ஆனால், இந்த டிராப்ஸை குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் உபயோகித்தால் க்ளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் நோய்த்தொற்று பாதிப்பும் வரலாம். எனவே, மருத்துவ ஆலோசனையோடு அவர் பரிந்துரைக்கும் நாள்களுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆன்டி ஹிஸ்டமைன் டிராப்ஸ் அப்படி ஆபத்தானதல்ல.

கண் எரிச்சல்
கண் எரிச்சல்
Photo by Towfiqu barbhuiya on Unsplash

அதேபோல மூக்கிலிருந்து நீர்வடிதல் போன்ற பாதிப்புகள் வந்தால், மூக்குக்கான ஸ்பிரே உபயோகிக்கலாம். உங்களுக்கு பூச்சி அலர்ஜி, தூசு அலர்ஜி, வளர்ப்புப் பிராணியால் அலர்ஜி போன்றவை இருந்தால் அவற்றை வேறுவிதமாக அணுகி சிகிச்சை அளிக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணமான பொருளையே சிறிது சிறிதாக வாய்வழியே சொட்டு மருந்தாகவோ, ஊசியாகவோ எடுத்துக்கொள்வது போன்றதொரு தீர்வு இருக்கிறது. சப்லிங்குவல் இம்யூனோதெரபி (Sublingual immunotherapy- SLIT) என்றொரு சிகிச்சை இருக்கிறது.

உங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை அலர்ஜியை ஏற்படுத்தாத ஆர்கானிக் சாயங்களை முயற்சி செய்து பார்க்கலாம். எதற்கும் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.