Published:Updated:

Doctor Vikatan: பித்தப்பை கற்களா, சிறுநீரகக் கற்களா... வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமா?

சிறுநீரகக் கல்
News
சிறுநீரகக் கல்

பித்தப்பை கற்கள் பாதித்திருந்தால், வயிற்றுவலி, முதுகுவலி, நெஞ்சுவலி, வாந்தி, காய்ச்சல், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: பித்தப்பை கற்களா, சிறுநீரகக் கற்களா... வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமா?

பித்தப்பை கற்கள் பாதித்திருந்தால், வயிற்றுவலி, முதுகுவலி, நெஞ்சுவலி, வாந்தி, காய்ச்சல், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

சிறுநீரகக் கல்
News
சிறுநீரகக் கல்

Doctor Vikatan: ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி வரும்போது, அது கிட்னி கற்களால் ஏற்படுவதா, பித்தப் பை கற்களால் ஏற்படுவதா என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

 மருத்துவர் நிவேதிதா
மருத்துவர் நிவேதிதா

மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பிரித்தறிவது சற்று சிரமம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலோ, ரத்தக் கசிவோ இருந்தால் அவை பித்தப்பை கற்கள் பாதிப்பாக இருக்காது.

பித்தப்பை என்பது வலதுபுறத்தில் இருக்கும். அதாவது வலது சிறுநீரகத்துக்கு சற்று மேல்தான் பித்தப்பை இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியில் வலி ஏற்படும்போது அதை வேறுபடுத்திப் பார்ப்பது சற்று சிரமம்தான். வாந்தி, வயிற்றுவலி, காய்ச்சல் போன்றவை பித்தப்பை கற்கள் பாதிப்பிலும் வரலாம், சிறுநீரகக் கற்கள் பாதிப்பிலும் வரலாம்.

பித்தப்பை கற்கள் பாதித்திருந்தால், வயிற்றுவலி, முதுகுவலி, நெஞ்சுவலி, வாந்தி, காய்ச்சல், அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் வருவது போன்ற தனிப்பட்ட அறிகுறிகளை உணர்ந்தால் அது கிட்னி கற்கள் உருவாகியிருப்பதன் விளைவாக இருக்கலாம். இருந்தாலுமே ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம்தான் இரண்டில் எது என்பதை உறுதியாகக் கண்டுபிடிக்க முடியும்.

சிறுநீரகக் கல்
சிறுநீரகக் கல்

சிறுநீரகக் கற்களின் அளவைப் பொறுத்து வலியின் தீவிரமும் இருக்கும். கற்கள் பெரிதாக இருந்தால் தாங்க முடியாத வலி ஏற்படலாம். எனவே நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதையும் சுய மருத்துவம் செய்வதையும் தவிர்த்து, மருத்துவ ஆலோசனையோடு சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.