Published:Updated:

Doctor Vikatan: பித்தப்பையில் கட்டிகள்... ஆபத்தான அறிகுறியா?

Gall Bladder (Representational Image)
News
Gall Bladder (Representational Image) ( Pixababy )

ஆபத்தான, புற்றுநோயாக மாறக்கூடிய பித்தப்பைக் கட்டிகள் அரிதானவை. அப்படிப்பட்ட கட்டிகள் வந்தால் பித்தப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவதுதான் தீர்வாக இருக்கும்.

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகிவிட்டது. என் பித்தப்பையில் நிறைய கட்டிகள் இருப்பதும் அதில் அதிகபட்சமாக 8 மி.மீ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு வயிற்று உப்புசமும் வலது பக்க வயிற்றில் தொடர்ச்சியான வலியும் இருக்கின்றன. இதை குணப்படுத்த முடியுமா? இந்தப் பிரச்னை சீரியஸானதா?

-Durga R, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

பித்தப்பையில் கட்டிகள் உள்ள எல்லோருக்கும் அவை அறிகுறிகளைக் காட்டாது. பித்தப்பை கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோய் அல்லாதவையாகவே இருக்கும். ஆனாலும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஒருவேளை பித்தப்பை கட்டிகள் அறிகுறிகளைக் காட்டினாலோ, அவை அளவில் பெரிதாக இருந்தாலோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கடைசியாகப் பரிசோதித்ததில் இருந்து அந்தக் கட்டியானது 2 மி.மீ அல்லது அதற்கு மேல் வளர்ந்திருக்கும் பட்சத்திலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.

எப்போது வேண்டுமானாலும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ளலாம். அதனால் எந்தப் பின்விளைவும் வராது. பயப்படவும் தேவையில்லை.

ஆபத்தான, புற்றுநோயாக மாறக்கூடிய பித்தப்பைக் கட்டிகள் அரிதானவை. அப்படிப்பட்ட கட்டிகள் வந்தால் பித்தப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவதுதான் தீர்வாக இருக்கும்.

பித்தப்பை
பித்தப்பை

இப்படி புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையைத் தொடரும் பட்சத்தில் பித்தப்பையை அகற்றிய பிறகு அந்த நபரின் ஆயுள் நல்லமுறையில் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.