Published:Updated:

Doctor Vikatan: ஒன்றாக வசிக்கும் தோழிகள்... ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவது இயல்பானதா?

பீரியட்ஸ்
News
பீரியட்ஸ்

பெண்கள் ஒரே இடத்தில் கருத்து ஒருமித்து ஒன்றுகூடி வாழும்போது அவர்களுடைய மாதவிலக்கு சுழற்சியும் ஒன்றுபோல இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டன.

Published:Updated:

Doctor Vikatan: ஒன்றாக வசிக்கும் தோழிகள்... ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவது இயல்பானதா?

பெண்கள் ஒரே இடத்தில் கருத்து ஒருமித்து ஒன்றுகூடி வாழும்போது அவர்களுடைய மாதவிலக்கு சுழற்சியும் ஒன்றுபோல இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பீரியட்ஸ்
News
பீரியட்ஸ்

Doctor Vikatan: நான் என் தோழிகளுடன் ஹாஸ்டலில் வசிக்கிறேன். எனக்கும் சில தோழிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவதை அடிக்கடி பார்க்கிறோம். இது இயல்பாக நடப்பதா அல்லது ஒன்றாக வாழ்கிற பெண்களுக்கு இப்படித்தான் நடக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

கருத்து ஒருமித்த தம்பதியர் சிந்திக்கும் விதம், நடந்துகொள்ளும் விதம் என எல்லாம் ஒன்றுபோல இருப்பதைப் பார்க்கலாம். பல வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழும் தம்பதியரின் முகச்சாயல்கூட ஒன்றுபோல மாறிவிடுவதைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் உள்ளன.

அதேபோல, பெண்கள் ஒரே இடத்தில் கருத்து ஒருமித்து ஒன்றுகூடி வாழும்போது அவர்களுடைய மாதவிலக்கு சுழற்சியும் ஒன்றுபோல இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதை Period syncing அல்லது menstrual synchrony அல்லது the McClintock effect என்று சொல்கிறார்கள். இதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இல்லை.

பெண்களுக்கு 26 முதல் 35 நாள் சுழற்சியில் மாதவிலக்கு வரலாம். அது 5 நாள்கள் முதல் 7 நாள்கள்வரை நீடிக்கலாம். அது நபருக்கு நபர் வேறுபடும். எனவே வீட்டிலோ, விடுதிகளிலோ ஒன்றாக, கருத்து ஒருமித்து வாழும் பெண்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் பீரியட்ஸ் சுழற்சி வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான சுவாசம், ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை சாத்தியம்.

உதாரணத்துக்கு, ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரே மாதிரி, ஒரே ஸ்ருதியில், ஏற்ற, இறக்கத்துடன் பாடுவார்கள். அவர்களது இதயத்துடிப்பு ஒன்றுபோல இருக்கும்.

பீரியட்ஸ்
பீரியட்ஸ்

மற்றபடி ஒன்றாகக் கூடி வாழும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் மாதவிலக்கு சுழற்சி வருமா என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை இதை உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.