Published:Updated:

Doctor Vikatan: சாப்பிட்ட உடன் பாத்ரூம் போகும் பழக்கம்... தீர்வு உண்டா?

சாப்பாடு
News
சாப்பாடு

சாப்பிட்ட உடனே சிலருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். சாப்பிட்ட உடனே பாத்ரூம் போகும் பழக்கத்தை `கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்' (Gastrocolic reflex) என்று சொல்கிறோம்.

Published:Updated:

Doctor Vikatan: சாப்பிட்ட உடன் பாத்ரூம் போகும் பழக்கம்... தீர்வு உண்டா?

சாப்பிட்ட உடனே சிலருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். சாப்பிட்ட உடனே பாத்ரூம் போகும் பழக்கத்தை `கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்' (Gastrocolic reflex) என்று சொல்கிறோம்.

சாப்பாடு
News
சாப்பாடு

Doctor Vikatan: சாப்பிட்டதும் உடனே பாத்ரூம் போகும் பழக்கம் இருக்கிறது. இதனால் வெளியிடங்களில், விசேஷங்களில் சாப்பிடுவதே இல்லை. இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்னையா? குணப்படுத்த வாய்ப்புண்டா? உணவு முறையில் மாற்றம் தேவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி.

மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி
மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்தி
Venkatesh RaviKumar

சாப்பிட்ட உடனே பாத்ரூம் போகும் பழக்கத்தை `கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்' (Gastrocolic reflex) என்று சொல்கிறோம். சாப்பிட்ட உடனே சிலருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். சிலர் உடனே மலம் கழிப்பார்கள்.

சாப்பிட்ட உணவானது வயிற்றுக்குள் இறங்கியதும் சில ஹார்மோன்கள் சுரக்கும். செரிமானமாகி, மலக்குடலில் உள்ள உணவைத் தூண்டி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கும். இப்படி ஏற்பட பல மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.

இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனும் பாதிப்பில் இப்படி ஏற்படலாம். மனப்பதற்றமும், ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமுள்ளோருக்கும் இப்படி ஏற்படலாம். சிலவகை உணவுகள் இந்த உணர்வைத் தூண்டலாம். சீலியாக் டிசீஸ் (Celiac disease) எனும் பாதிப்பும், இன்ஃப்ளமேட்டரி பவல் டிசீஸ் (Inflammatory bowel disease) எனும் பாதிப்பும்கூட காரணமாகலாம்.

ஸ்ட்ரெஸ் |சாப்பிட்ட உடனே பாதிப்பு
ஸ்ட்ரெஸ் |சாப்பிட்ட உடனே பாதிப்பு

இந்த பாதிப்பு உள்ளவர்கள் முதலில் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அவசியம் தவிர்த்தாக வேண்டும்.

வெண்ணெய் போன்று கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு பால் மற்றும் பால் உணவுகள்கூட இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு பலருக்கும் பெரிய தொந்தரவைத் தரக்கூடிய ஒரு பிரச்னை. அதனால் வெளியிடங் களில் சாப்பிடவே அவர்களுக்கு பயமாக இருக்கும்.

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் உணர்வு தொடர்ந்தாலோ, வயிறு உப்புசமாக இருந்தாலோ, மலம் கழிக்கும்போது சளியும், ரத்தமும் கலந்து வெளியேறினாலோ அவர்கள், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரமும் மிக முக்கியம். ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையில் நீண்டநேரம் இடைவெளி இருக்கக் கூடாது. போதுமான தூக்கம் மிக முக்கியம். 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

சாப்பிட்ட உடனே.. பிரச்னை
சாப்பிட்ட உடனே.. பிரச்னை

மனப்பதற்றத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் தவிர்த்தே ஆக வேண்டும். இதை `கட்- பிரெயின் ஆக்சிஸ்' (gut-brain axis ) என்று சொல்வோம்.

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ளோருக்கு, இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கும். அதன் விளைவாக அவர்களுக்கு கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு ஏற்படலாம். சிகரெட் மற்றும் மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களை முறையாகக் கடைப்பிடித்தாலே கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.