Published:Updated:

Doctor Vikatan: உடலுழைப்பே இல்லாத நபர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வாக்கிங் செய்யலாம்?

Walking
News
Walking ( Vivekanandan.N )

ஒரு நபருக்கு மூட்டுவலியோ, முதுகுவலியோ, வேறு பிரச்னைகளோ இருக்கக்கூடும். அது தெரியாமல் அவருக்கான நடைப்பயிற்சியையோ, வேறு உடற்பயிற்சிகளையோ பரிந்துரைப்பது சரியான விஷயமல்ல.

Doctor Vikatan: சுமார் 50 வயதுடைய, உடல் உழைப்பு ஏதும் இல்லாத ஆண்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எவ்வளவு தூரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

-Inc, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

50 வயது ஆண், இதுவரை உடலியக்கமே இல்லை என்ற நிலையில், அந்த நபர் முதலில் அவரது உடல்நிலையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி பிரச்னை ஏதும் இல்லை என்பது உறுதியானால், ஃபிட்னஸ் ஆலோசகரின் வழிகாட்டுதலோடு அவருக்கான உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொண்டு செய்யத் தொடங்குவதுதான் சரி.

ஒரு நபருக்கு மூட்டுவலியோ, முதுகுவலியோ, வேறு பிரச்னைகளோ இருக்கக்கூடும். அது தெரியாமல் அவருக்கான நடைப்பயிற்சியையோ, வேறு உடற்பயிற்சிகளையோ பரிந்துரைப்பது சரியான விஷயமல்ல.

மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒருவேளை பிரச்னைகள் இருந்தால் அவற்றை குணப்படுத்தும் முயற்சிகளைச் செய்த பின், ஃபிட்னஸ் ஆலோசகர் உதவியோடு உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.

வாக்கிங்
வாக்கிங்

உடற்பயிற்சி ஆலோசகரின் வழிகாட்டுதலோடு செய்யும்போது அவர்களால் உங்களுக்கு எந்த அளவுக்கு பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொடுக்க முடியும். உடற்பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் காயங்கள், தசைப்பிடிப்பு போன்வற்றைத் தவிர்த்துவிட்டுச் செய்யவும் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.