Published:Updated:

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

Degree coffee
News
Degree coffee

ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும். சிலருக்கு இதனால் பற்கள் கறையாகலாம். வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம்.

Published:Updated:

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும். சிலருக்கு இதனால் பற்கள் கறையாகலாம். வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம்.

Degree coffee
News
Degree coffee

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? எல்லோரும் பொதுவாக 3 - 4 என சொல்கிறார்கள். அளவு எவ்வளவு என்று குறிப்பிடுவதில்லை. அதிக காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்த அதில் சேர்க்கப்படும் பால் பிரச்னையா அல்லது கஃபைன் பிரச்னையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
விகடன்

காபியோ, டீயோ.... ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். அப்படி அளந்து குடிப்பது சிறந்தது.

சிலர் பெரிய மக் நிறைய காபியோ, டீயோ குடிப்பார்கள். அந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதில் சில சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. தவிர ஒவ்வொருமுறை நீங்கள் குடிக்கும் காபி, டீயில் சேரும் சர்க்கரையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

உதாரணத்துக்கு, முறையாக வொர்க் அவுட் செய்யும் பழக்கமுள்ள நபர்கள், வொர்க் அவுட்டுக்கு முன் பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பது நல்லது. அது வொர்க் அவுட்டுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதுவே களைப்பு, படபடப்பு போன்றவை உள்ளவர்கள் கஃபைன் அளவைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம்.

ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். சிலருக்கு இதனால் பற்கள் கறையாகலாம். வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம். காபி குடித்த அடுத்த பத்து நிமிடங்களில் வயிறு வலிப்பதாக உணர்வார்கள். இது தொடர்ந்தால் அவர்களுக்கு பால் அல்லது கஃபைன் ஏற்றுக் கொள்ளவில்லை என அர்த்தம். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். காபியில் உள்ள டானின், உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடுத்து ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு காரணமாகும். குறிப்பாக பெண்களுக்கு பொதுவாகவே ரத்தச்சோகை பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் அவர்கள் காபி, டீயின் அளவைக் குறைப்பது அல்லது அறவே தவிர்ப்பது அவசியமாகும்.

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

செரிமானம் தொடர்பான பிரச்னைகளும் இருப்பவர்கள், பால் தவிர்த்து பிளாக் காபி, பிளாக் டீ எடுத்துக்கொள்ளலாம். இப்போது கடைகளில் நட்ஸ் வைத்துத் தயாரித்த பால் வகைகள் கிடைக்கின்றன. அவற்றை மாட்டுப் பாலுக்கு மாற்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.