Published:Updated:

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி... 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா?

மாதவிடாய்
News
மாதவிடாய்

வழக்கமாக 40 வயதுக்கும் மேலான பருவத்தை `பெரி மெனோபாஸ்' என்று சொல்வோம். அதாவது, மெனோபாஸுக்கு முந்தைய நிலை இது. பெரிமெனோபாஸ் என்பது சிலருக்கு 40 வயதில் ஆரம்பிக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி... 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா?

வழக்கமாக 40 வயதுக்கும் மேலான பருவத்தை `பெரி மெனோபாஸ்' என்று சொல்வோம். அதாவது, மெனோபாஸுக்கு முந்தைய நிலை இது. பெரிமெனோபாஸ் என்பது சிலருக்கு 40 வயதில் ஆரம்பிக்கலாம்.

மாதவிடாய்
News
மாதவிடாய்

Doctor Vikatan: எனக்கு 45 வயதாகிறது. வயதுக்கு வந்ததில் இருந்து இன்று வரை மாதவிடாயில் எந்தப் பிரச்னையும் இல்லை. முதல் குழந்தை சுகப்பிரசவம், இரண்டாவது இரட்டைக் குழந்தைகள் என்பதால் சிசேரியன். அப்போதும் மாதவிடாயில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஒரு வாரத்துக்கு முன்போ, பின்போ மாதவிடாய் வருகிறது. இது சரியானதுதானா? ஒரு சிலர் 50 வயது வரை மாதவிடாய் வந்தால்தான் நல்லது என்கிறார்கள். விளக்கம் தரவும்.

- Sasikala, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

வழக்கமாக 40 வயதுக்கும் மேலான மாதவிடாய் பருவத்தை `பெரி மெனோபாஸ்' என்று சொல்வோம். அதாவது, மெனோபாஸுக்கு முந்தைய நிலை இது. பெரிமெனோபாஸ் என்பது சிலருக்கு 40 வயதில் ஆரம்பிக்கலாம். வேறு சிலருக்கு முப்பதுகளின் இடையில்கூட அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். நம்முடைய சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண் ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அதாவது, உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன்ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.

உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்றவை மெனோபாஸுக்கான அறிகுறிகள், பெரிமெனோபாஸ் காலத்திலேயே சிலருக்கு ஆரம்பிக்கும். 12 மாதங்களுக்கு தொடர்ந்து பீரியட்ஸே வரவில்லை என்றால் ஒரு பெண் மெனோபாஸை அடைந்துவிட்டார் என எடுத்துக்கொள்ளலாம்.

periods
periods

முறைதவறிய மாதவிலக்கானது 7 நாள்கள் இடைவெளியில் வந்தால் நீங்கள் பெரிமெனோபாஸின் ஆரம்பநிலையில் இருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாம். அதுவே அந்த இடைவெளியானது 60 நாள்கள் என நீடித்தால் நீங்கள் மெனோபாஸ் நிலையில் இருக்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாம். மெனோபாஸுக்கான அறிகுறிகளுடன் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, எலும்புத் தேய்மானம் போன்றவையும் வரலாம்.

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கான சராசரி வயது 51. ஆனால், இதைப் பல விஷயங்கள் பாதிக்கலாம். சில பெண்களுக்கு சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு இப்படி சீக்கிரமே மெனோபாஸ் வரலாம்.

கேன்சர் சிகிச்சையில் இருந்தாலோ, கர்ப்பப்பையை அகற்றிவிட்டு சினைப்பைகள் மட்டும் இருக்கும் நிலையிலோகூட சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம்.

Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி... 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா?

குடும்ப பின்னணியில் எல்லோருக்கும் இளம் வயதிலேயே மெனோபாஸ் வந்திருந்தால் உங்களுக்கும் அப்படி வர வாய்ப்புகள் உண்டு. பெரிமெனோபாஸ் காலத்தில் உங்களுக்கு அதிக ப்ளீடிங் இருந்தால், அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, 7 நாள்களுக்கு மேல் ப்ளீடிங் தொடர்ந்தாலோ, இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங் இருந்தாலோ, 21 நாள்களுக்கு முன்பாக பீரியட்ஸ் வந்தாலோ, அடிவயிற்றில வலி இருந்தாலோ மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.