Published:Updated:

Doctor Vikatan: மருமகளுக்கு முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி... கருத்தரிப்பை பாதிக்குமா?

மாதவிடாய்
News
மாதவிடாய்

திருமணமாகி பொதுவாக ஒரு வருடம்வரை காத்திருப்பதில் தவறில்லை என்று சொல்வோம். ஏனென்றால் ஒரு வருடத்தின் முடிவில் பெரும்பான்மையான தம்பதியருக்கு சிகிச்சை தேவையின்றி தானாகவே கருத்தரித்துவிடும்.

Published:Updated:

Doctor Vikatan: மருமகளுக்கு முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி... கருத்தரிப்பை பாதிக்குமா?

திருமணமாகி பொதுவாக ஒரு வருடம்வரை காத்திருப்பதில் தவறில்லை என்று சொல்வோம். ஏனென்றால் ஒரு வருடத்தின் முடிவில் பெரும்பான்மையான தம்பதியருக்கு சிகிச்சை தேவையின்றி தானாகவே கருத்தரித்துவிடும்.

மாதவிடாய்
News
மாதவிடாய்

Doctor Vikatan: என் மருமகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறைதான் பீரியட்ஸ் வருகிறது. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. நான் என் மகன், மருமகளுக்கு அது குறித்து எந்த அழுத்தமும் தருவதில்லை. ஆனாலும் மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் அவள் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா?

Uma, விகடன் இணையத்திலிருந்து...

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

 மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

மாதவிடாய் சுழற்சியானது 21 நாள் முதல் 37 நாள் வரை இருப்பதை நார்மல் என்றே குறிப்பிடுவோம். 37 நாள்களைக் கடந்து வருவது முறையற்ற சுழற்சியாகவே கருதப்படும்.

நீங்கள் கேட்டிருப்பதைப் போல உங்கள் மருமகளுக்கு மருத்துவப் பரிசோதனை தேவைதான். ஒரு பெண்ணுக்கு முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்தால் அவருக்கு கருமுட்டை வெளியேறுவதில் ஏதாவது பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியிருக்கும். அந்நிலையில் அவர்களுக்கு அடிப்படையாக ஒரு ஸ்கேன் பரிசோதனை தேவைப்படும்.

கூடவே ஃபாலிக்குலர் மானிட்டரிங்கும் தேவைப்படும். அதாவது கருமுட்டைகள் சரியாக வளர்கின்றனவா, சரியான நேரத்தில் கருமுட்டைகள் வெளியேறுகின்றனவா என்று ட்ராக் செய்ய வேண்டும்.

பொதுவாகவே திருமணமான ஒரு வருடத்துக்குள் ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அவருக்கு அடிப்படையாகச் செய்ய வேண்டிய சில பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். கருமுட்டைகள் சரியான வளர்கின்றனவா என பார்க்க அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், கருக்குழாய்கள் அடைப்பின்றி இருக்கின்றனவா என பார்க்க டியூபல் பேட்டென்சி டெஸ்ட் (Tubal Patency Test) மற்றும் கணவருக்கு செமன் அனாலிஸ் (Semen Analysis) டெஸ்ட் ஆகிய மூன்றையும் செய்துபார்க்க மருத்துவர் பரிந்துரைப்பார்.

திருமணமாகி பொதுவாக ஒரு வருடம்வரை காத்திருப்பதில் தவறில்லை என்று சொல்வோம். ஏனென்றால் ஒரு வருடத்தின் முடிவில் பெரும்பான்மையான தம்பதியருக்கு சிகிச்சை தேவையின்றி தானாகவே கருத்தரித்துவிடும்.

Pain (Representational Image)
Pain (Representational Image)
Photo by Sora Shimazaki from Pexels

திருமணமான முதல் மாதத்தில் கருத்தரிக்கும் வாய்ப்பானது, பிரச்னைகள் ஏதுமில்லாத தம்பதியருக்கே வெறும் 15 சதவிகிதம் மட்டுமே. உங்கள் மகன், மருமகள் விஷயத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே இதற்கு மேலும் தாமதிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சரியாக இருக்கும்.

மாதவிடாய் முறைதவறி வருவதற்கு தைராய்டு பாதிப்பு, பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் போன்ற பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். இதற்கெல்லாம் முன்பு நீங்கள் இன்னொரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் மகனும் மருமகளும் குழந்தைக்காக முயற்சி செய்கிறார்களா அல்லது அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மாதவிடாய்
மாதவிடாய்

மேற்குறிப்பிட்ட டெஸ்ட்டுகளை செய்து பார்த்தாலே அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு பிரச்னைக்கேற்ப அவர்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.