Published:Updated:

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

உடற்பயிற்சி
News
உடற்பயிற்சி

30 - 35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள்.

Published:Updated:

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

30 - 35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள்.

உடற்பயிற்சி
News
உடற்பயிற்சி

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்...

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் எலெக்ட்ரிகல் ஆக்டிவிட்டியைப் பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட இசிஜியில் கண்டுபிடிக்க முடியும்.

மேற்கத்திய மருத்துவ கைடுலைன்படி. முறையாக டிரெட்மில் செய்யச் சொல்லி அறிவுறுத்தப்படுவதில்லை. ஆனால், இந்தியர்களிடையே மாரடைப்பு விகிதம் அதிகம் என்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மருத்துவரிடம் பேசி, இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

30 - 35 வயதிலேயே இன்று பலரும் உடலியக்கங்களைக் குறைத்துக்கொள்கிறார்கள். 50 வயதில் அடியெடுத்து வைக்கும்போதே தனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறார்கள். சிலருக்கு இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மெள்ள மெள்ள அதன் தீவிரம் அதிகரிக்கிறது. அந்நிலையில், அவர்களால் உடல்ரீதியாக ஆக்டிவ்வாக இருக்க முடிவதில்லை. அதனாலும் உடலியக்கங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். ரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக இதயத்துக்குப் போதுமான ஆக்ஸிஜன் செல்வதில்லை.

டிரெட்மில் டெஸ்ட் செய்யும்போது ஒருவரால் எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது, வேகமாக நடக்கும்போது ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தெரிகின்றனவா என்று தெரியும்.

ECG
ECG
Pixabay

இசிஜி டெஸ்ட் எடுக்கிறார்கள்... நார்மல் என்று ரிசல்ட் வருகிறது. அதனால் இனி எதிர்காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில், இசிஜி என்பது ஏற்கெனவே மாரடைப்பு வந்ததையும், தற்சமயம் அதற்கான ஆபத்து இருக்கிறதா என்பதையும் மட்டும்தான் காட்டும். அதுவே இதயத்தில் 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது இசிஜியிலோ, டிரெட்மில் டெஸ்ட்டிலோ தெரியாது. நார்மல் என்றே காட்டும்.

எனவே, சிலருக்கு கார்டியாக் CT மற்றும் ஆஞ்சியோகிராம் என இரண்டு பிரத்யேக டெஸ்ட்டுகள் மூலம்தான் ரத்தக்குழாய் அடைப்பைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். அதற்காக எல்லோரும் போய் இந்த இரண்டு டெஸ்ட்டுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

இதயம்
இதயம்

இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்ற ரிஸ்க் பிரிவில் உள்ளவர்கள் மருத்துவரிடம் பேசி, முன்னெச்சரிக்கையாக இந்த டெஸ்ட்டை செய்துகொள்ளலாம். மற்றபடி 40 வயதுக்கு மேலானவர்கள் இசிஜி மற்றும் டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்ப்பதில் தவறு கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.