Published:Updated:

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளைத் தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா?

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Pixabay )

காலாவதி தேதிக்குப் பிறகும் பல ஆண்டுகள் சக்தியை இழக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் காலாவதி தேதிக்குப் பிறகு எந்தெந்த மருந்துகள் எத்தனை நாள்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வது மிகவும் கடினம்.

Published:Updated:

Doctor Vikatan: எக்ஸ்பைரி ஆன மருந்துகளைத் தவறுதலாக உட்கொண்டால் ஆபத்தா?

காலாவதி தேதிக்குப் பிறகும் பல ஆண்டுகள் சக்தியை இழக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் காலாவதி தேதிக்குப் பிறகு எந்தெந்த மருந்துகள் எத்தனை நாள்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வது மிகவும் கடினம்.

Tablets (Representational Image)
News
Tablets (Representational Image) ( Pixabay )

Doctor Vikatan: தவறுதலாக எக்ஸ்பைரி ஆன மருந்துகளை உட்கொண்டால் என்ன ஆகும்? காலாவதி தேதியிலிருந்து எத்தனை நாள்களுக்குள் மருந்துகளை உபயோகித்து முடிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே.பாஸ்கர்.

மருத்துவர் கே.பாஸ்கர்
மருத்துவர் கே.பாஸ்கர்

காலாவதியான மருந்துகளை எக்காரணம் கொண்டும் உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக இன்சுலின், திரவ வடிவில் இருக்கும் மற்ற ஊசி மருந்துகள், கண் அல்லது காது சொட்டு மருந்துகள், தடுப்பூசி மருந்துகள் ஆகியவை காலாவதியாகும் தேதிக்குப் பிறகு ஆற்றல் குறைந்துவிடும். ஆற்றல் குறைந்த மருந்தை உட்கொள்வது ஆபத்தானது. டெட்ராசைக்ளின் (Tetracycline) போன்ற ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை காலாவதியான தேதிக்குப் பிறகு உட்கொண்டால் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

அமெரிக்க ராணுவம் செய்த ஆய்வின்படி, திட (solid) வடிவத்தில் உள்ள பல மாத்திரைகள், காலாவதி தேதிக்குப் பிறகும் பல ஆண்டுகள் சக்தியை இழக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் காலாவதி தேதிக்குப் பிறகு எந்தெந்த மருந்துகள் எத்தனை நாள்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வது மிகவும் கடினம்.

மேலும் திறக்கப்பட்ட பாட்டில்களில் இருக்கும் சொட்டு மருந்துகள் நான்கு வாரங்களுக்குள் உபயோகிக்கப்பட வேண்டும். பாட்டில் திறக்கப்படும்வரைதான் காலாவதி தேதி கணக்கில் கொள்ளப்படும்.

இறுதியாக, `எக்ஸ்பைரி ஆன மருந்துகளை தவறுதலாக உட்கொண்டால் என்ன ஆகும்' என்கிற உங்கள் கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மாத்திரையை, எத்தனை நாள்களுக்குப் பிறகு உட்கொண்டீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது.

மாத்திரைகள்
மாத்திரைகள்

வெப்பம், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி போன்றவை, சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளை பாதிக்கும். உதாரணத்துக்கு, மெட்டாசின் போன்ற சிலவகை வலி மாத்திரைகள், அமாக்ஸிலின் போன்ற கிருமி நாசினி போன்றவற்றை காலாவதி தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள் நான் உபயோகித்திருக்கிறேன்.

ஆனால், ஒரு மருத்துவராக நான் உங்களிடம் அதைப் பரிந்துரைக்க முடியாது. அப்படிச் செய்தால் அது மருத்துவச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆகிவிடும். காலாவதி தேதிக்குப் பிறகு எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்றுதான் நான் பரிந்துரைக்க முடியும். ஒருவேளை தவறுதலாக நீங்கள் காலாவதி தேதிக்குப் பிறகு உட்கொண்டுவிட்டால் உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.