Published:Updated:

Doctor Vikatan: கொரோனாவை விஞ்சும் இன்னொரு தொற்று வரப்போகிறது என்பது உண்மையா?

தொற்று
News
தொற்று

புதிது புதிதாகத் தோன்றும் தொற்றுநோய்களை `எமெர்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்று சொல்கிறார்கள். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஏற்கெனவே இருந்து, ஒரு கட்டத்தில் குறைந்துபோன தொற்று. எம் பாக்ஸ் (குரங்கு அம்மை) போன்ற தொற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

Published:Updated:

Doctor Vikatan: கொரோனாவை விஞ்சும் இன்னொரு தொற்று வரப்போகிறது என்பது உண்மையா?

புதிது புதிதாகத் தோன்றும் தொற்றுநோய்களை `எமெர்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்று சொல்கிறார்கள். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஏற்கெனவே இருந்து, ஒரு கட்டத்தில் குறைந்துபோன தொற்று. எம் பாக்ஸ் (குரங்கு அம்மை) போன்ற தொற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

தொற்று
News
தொற்று

Doctor Vikatan: கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது அடுத்து இதைவிட பயங்கரமான தொற்றுநோய்கள் பரவும் என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைவதா என்று தெரியவில்லை. கொரோனாவைப் போல இன்னொரு தொற்று நம்மை பாதிக்க எந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

Doctor Vikatan: கொரோனாவை விஞ்சும் இன்னொரு தொற்று வரப்போகிறது என்பது உண்மையா?

கோவிட் பெருந்தொற்றானது நமக்கு நிறைய படிப்பினைகளைக் கற்றுத் தந்திருக்கிறது. மருத்துவமும் விஞ்ஞானமும் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் இப்படியொரு தொற்று சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி, மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டுமன்றி, வாழ்வாதாரம், பொருளாதாரம் என எல்லாவற்றையும் ஆட்டிப் பார்க்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

புதிது புதிதாகத் தொன்றும் தொற்றுநோய்களை `எமெர்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' (Emerging Infectious Diseases) என்று சொல்கிறார்கள். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஏற்கெனவே இருந்து, ஒரு கட்டத்தில் குறைந்துபோன தொற்று. எம் பாக்ஸ் (குரங்கு அம்மை) போன்ற தொற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

அதாவது, ஒரு காலத்தில் தீவிரமாகப் பரவி, பிறகு கொரோனாவுக்கு நாம் பின்பற்றியது போல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் தொற்று கட்டுக்குள் வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் இல்லாமல் போய், மீண்டும் பரவ ஆரம்பிக்கின்றன. திரும்ப எண்ணிக்கை அதிகரிப்பதை `ரீஎமெர்ஜிங்' (Re-emerging) என்று சொல்வோம்.

இன்னொரு பிரிவு, புதிதாக உருவாகும் தொற்றுநோய்கள். அதாவது, புதிதாகக் கண்டறியப்படும் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள். சார்ஸ், மெர்ஸ் போன்ற தொற்றுகள் வந்தபோதிலிருந்தே ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நகரமயமாக்கல்.

கொரோனா
கொரோனா
pixabay

காடுகளுக்கும் மனித வசிப்பிடங்களுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. காடுகளில் மிருகங்கள் வசிக்க இடமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. விலங்குகளைத் தாக்கும் கிருமிகள், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில், வேறோர் உடலைத் தேடிச் செல்கின்றன. மனித உடல் அவற்றுக்கு ஏதுவாக இருக்கும்போது விலங்குகளிட மிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஹெச்ஐவி, சார்ஸ் கோவிட் 2 போன்றவை அப்படி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்தவைதான். மனிதர்களுக்கும் இயற்கைக்குமான இடைவெளி குறைந்தது, நகரமயமாக்கல், மக்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றுடன், பொது சுகாதாரமும் கேள்விக்குறியதாகும்போது, அதாவது தடுப்பு நடவடிக்கைகள் குறையும்போது இப்படிப்பட்ட புதிய தொற்றுகள் உருவாகின்றன.

கோவிட் தொற்றுப்பரவலின் ஆரம்பத்தில், அந்தத் தொற்றை லேசாக எடுத்துக்கொண்டதாகவும், சரியாகக் கையாளத் தவறிவிட்டதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் மேல் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. கோவிட் தொற்றுக்கு முன் வந்த சிலவகை தொற்றுகள் குறிப்பிட்ட சில இடங்களில் பரவி, படிப்படியாகக் குறைந்துபோயின. ஆனால், கோவிட் விதிவிலக்காக இருந்தது. உலகம் முழுவதும் பயணம் செய்வது இன்று பலருக்கும் எளிதாகியிருக்கிற நிலையில், இதுபோன்ற தொற்றுகள் பரவுவது சாத்தியம்தான் என்றும் கொரோனா நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறது. எனவே, இனிமேலும் இது போன்ற புதிய தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையாகவே இருக்கிறது.

covid-19 infection
covid-19 infection

புதிய தொற்றுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, வந்தால் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும், மருந்துகளுக்கான தேவை எப்படி இருக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை வேகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கிறார்கள்.

எப்படியிருப்பினும், கொரோனா தொற்று இன்னும் நம்மைவிட்டு முழுமையாக நீங்கவில்லை என்பதால் நாம் இன்னும் சில காலத்துக்கு முகக்கவசம் அணிவது, கைகளுக்கான சுகாதாரம், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.