Published:Updated:

Doctor Vikatan: எடையைச் சுமந்தபடி வாக்கிங் செய்வது சரியானதா?

walking
News
walking ( Pixabay )

வெயிட்டடு வெஸ்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கும்போதே அளவுக்கதிகமான எடை உள்ளதாக வாங்காமல், சின்ன அளவுகளில் ஆரம்பிக்கலாம். அதை உபயோகித்து உங்கள் உடல் பழகியதும் மெள்ள, மெள்ள எடையை அதிகரித்துக்கொள்ளலாம்.

Doctor Vikatan: என் தோழியின் மகனுக்கு 22 வயது. மிகவும் பருமனாக இருக்கும் அவன், தினமும் வெளியே செல்லும்போது உடலில் வெயிட் கட்டிக்கொண்டு செல்கிறான். அப்படி நடப்பது எடையைக் குறைக்க உதவும் என்கிறான். இது சரியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்...

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

நீங்கள் குறிப்பிடுவது 'வெயிட்டடு வெஸ்ட்' (weighted vest ) என்று புரிந்துகொள்கிறேன். அதாவது இது ஒருவகையான உடுப்பு. இன்னும் புரிகிற மாதிரிச் சொல்ல வேண்டும் என்றால் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளோர் பயன்படுத்தும் பிரத்யேகமான உடுப்பு. பார்ப்பதற்கு சாதாரண உள்ளாடைகள் போலத் தெரியும் இவற்றில் எடை சேர்க்கப்பட்டிருக்கும்.

வொர்க் அவுட் செய்யும்போது வெயிட்டடு வெஸ்ட் பயன்படுத்துவது பலரது வழக்கம். புல் அவுட், ரன்னிங் என குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகள் செய்யும்போது இவற்றை அணிந்துகொள்ளலாம். உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க இவை உதவும்.

எனவே உங்கள் தோழியின் மகன் இதைத்தான் அணிந்துகொண்டு வாக்கிங் செல்கிறார் என்றால் அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இதை உபயோகிப்பதென முடிவெடுத்துவிட்டால் அவரவர் உடல் எடைக்குத் தகுந்தபடியான வெயிட்டடு வெஸ்ட்டாக பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

வெயிட்டடு வெஸ்ட்ஸ் உபயோகிக்கத் தொடங்கும்போதே அளவுக்கதிகமான எடை உள்ளதாக வாங்காமல், சின்ன அளவுகளில் ஆரம்பிக்கலாம். அதை உபயோகித்து உங்கள் உடல் பழகியதும் மெள்ள, மெள்ள எடையை அதிகரித்துக்கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் அதிக பருமனாக இருந்து, அதனுடன் வெயிட்டடு வெஸ்ட் அணிந்து நடமாடினால் அதன் அழுத்தம் காரணமாக உங்களுக்கு முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. எனவே ஃபிட்னெஸ் ஆலோசகரிடம் பேசி, உங்கள் உடல்நல பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றபடி இதைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானது.

Walking
Walking
Image by Daniel Reche from Pixabay

சாதாரணமாக நடக்கும்போது கிடைக்கும் பலன்களைவிட, வெயிட்டடு வெஸ்ட் அணிந்து செய்யும்போது கிடைக்கும் பலன்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய நுரையீரல் இயக்கம் மேம்படும். ஒட்டுமொத்த உடலுக்கும் அது நல்லதுதான்.

ஆனாலும் இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது நீங்கள் பயன்படுத்துகிற எடையின் அளவு. அது சரியாக இருக்கும்வரை பிரச்னைகள் இருக்காது. உடலின் சக்திக்கு மீறிய எடை கொண்ட வெயிட்டடு வெஸ்ட் அணிந்து வொர்க் அவுட் செய்யும்போது உங்களுக்கு பாதிப்புகள்தான் அதிகரிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.