Published:Updated:

Doctor Vikatan: காதுக்குள் ஒலிக்கும் சத்தம்... குணப்படுத்த முடியுமா?

ear
News
ear

ஆடியோகிராம் பரிசோதனை செய்து பார்த்து, கேட்கும் திறனில் ஏதேனும் இழப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கும். தவிர பாதிப்பின் தீவிரத்துக்கேற்ப எம்ஆர்ஐ மற்றும் எம்ஆர்ஐ ஆஞ்சியோ சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: காதுக்குள் ஒலிக்கும் சத்தம்... குணப்படுத்த முடியுமா?

ஆடியோகிராம் பரிசோதனை செய்து பார்த்து, கேட்கும் திறனில் ஏதேனும் இழப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கும். தவிர பாதிப்பின் தீவிரத்துக்கேற்ப எம்ஆர்ஐ மற்றும் எம்ஆர்ஐ ஆஞ்சியோ சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.

ear
News
ear

Doctor Vikatan: என்னுடைய இடது பக்க காதில் மணி அடிப்பது போல ( Ringing Sound) ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை குணப்படுத்த முடியுமா?

-Jayabalan Jegan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா...

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காதுகளுக்குள் மணியடிப்பது போன்ற உணர்வு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். காதுக்குள் அடிபட்டு, காயம் ஏற்படுவது, வேறு ஏதோ மருத்துவ சிகிச்சைகளின் பக்க விளைவு, காது நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பு அல்லது ரத்த ஓட்டம் குறைந்து போனது போன்றவை இந்தப் பிரச்னைக்கான முக்கியமான காரணங்கள்.

இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை என்பது பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். அதாவது இந்த உணர்வு உங்களுக்கு திடீரென ஏற்பட்டதா அல்லது மெள்ள மெள்ள அதிகரித்து வருகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆடியோகிராம் பரிசோதனை செய்து பார்த்து, கேட்கும் திறனில் ஏதேனும் இழப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கும். தவிர பாதிப்பின் தீவிரத்துக்கேற்ப எம்ஆர்ஐ மற்றும் எம்ஆர்ஐ ஆஞ்சியோ சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால், குணப்படுத்துவது எளிது.

காது
காது

பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலம் குணப்படுத்துவதா, ஏதேனும் பிரத்யேக கருவிகள் கொடுத்து இந்தப் பிரச்னையிலிருந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்க முடியுமா என்பதை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் முடிவு செய்வார்.

கருவிகளைப் பயன்படுத்துவதில் சம்பந்தப்பட்ட நபருக்கு விருப்பமில்லை என்றாலும் அதற்கான மாற்று சிகிச்சைகள் பற்றி மருத்துவர் அறிவுறுத்துவார். எனவே இந்த விஷயத்தை அலட்சியமாகக் கையாளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.