Published:Updated:

Doctor Vikatan: எடைக்குறைப்பு முயற்சியும், நோயாளி தோற்றமும்... தவிர்க்கவே முடியாதா?

எடைக்குறைப்பு
News
எடைக்குறைப்பு

சீக்கிரமே பலன் வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமான உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதோ, அதீதமான கார்டியோ பயிற்சிகள் செய்வதோ கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் உடலில் தசையிழப்பு ஏற்பட்டு, முகத்திலுள்ள தசைகள் தொய்வடையத் தொடங்கும்.

Published:Updated:

Doctor Vikatan: எடைக்குறைப்பு முயற்சியும், நோயாளி தோற்றமும்... தவிர்க்கவே முடியாதா?

சீக்கிரமே பலன் வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமான உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதோ, அதீதமான கார்டியோ பயிற்சிகள் செய்வதோ கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் உடலில் தசையிழப்பு ஏற்பட்டு, முகத்திலுள்ள தசைகள் தொய்வடையத் தொடங்கும்.

எடைக்குறைப்பு
News
எடைக்குறைப்பு

எடையைக் குறைக்கும்போது முகம் இளைத்து நோய்வாய்ப்பட்ட தோற்றம் தெரிவதைத் தவிர்க்க முடியாதா? எத்தனை நாள்களில் அது சரியாகும்? முகம் இளைக்காமல் எடையைக் குறைக்க முடியாதா?

ஷீபா தேவராஜ்
ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

எடையைக் குறைக்க நினைக்கிற பலருக்கும் இருக்கும் பயமும் சந்தேகமும் இதுதான். எடைக்குறைப்பு முயற்சியில் நீங்கள் பின்பற்றும் டயட்டும், மேற்கொள்ளும் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளும் சரியாக இல்லாத பட்சத்தில்தான் முகம் நோய்வாய்ப்பட்டது மாதிரி தெரியும்.

சீக்கிரமே பலன் வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதோ, அதீதமான கார்டியோ பயிற்சிகள் செய்வதோ கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் உடலில் தசையிழப்பு ஏற்பட்டு, முகத்திலுள்ள தசைகள் தொய்வடையத் தொடங்கும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

எனவே, உங்கள் ஜிம் பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையோடு சரிவிகித புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சேர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 4 நாள்களுக்கு ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகள், மிதமான கார்டியோ பயிற்சிகள் என இந்த ரொட்டீனை பின்பற்றினால் மட்டும்தான், நீங்கள் எத்தனை கிலோ எடையைக் குறைத்தாலும் தசையிழப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் மிகக் குறைந்த அளவு சாப்பிடுவது சரியானதல்ல. அப்படிச் சாப்பிடுவதால் உங்களுக்கு உடலில் ஆற்றலும் இருக்காது. மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். நோய்வாய்ப்பட்டவர் போலத் தெரிவீர்கள்.

எனவே, முகம் தொய்வடைவதும் நோயாளி போன்ற தோற்றமும் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சிகளையும் சரியாகச் செய்யாததன் அறிகுறி. இரண்டையும் சரியாகச் செய்யும் பட்சத்தில் நீங்கள் முன்பைவிட இன்னும் இளமையாகவே காட்சியளிப்பீர்கள்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

இந்த இரண்டு தவறுகளையும் செய்யாமலிருக்க எடைக்குறைப்பு முயற்சிகளுக்கு உங்களுக்கு சரியான நபரின் வழிகாட்டுதலும் பயிற்சியும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.