Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரை தீவிரமானால் விரல் அகற்ற வேண்டுமா? விஜயகாந்துக்கு என்ன நடந்தது?

விஜயகாந்த்
News
விஜயகாந்த்

தொற்றானது ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க, சம்பந்தப்பட்ட உறுப்பை அகற்ற வேண்டியிருக்கும். நடிகர் விஜய்காந்த் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். 

Published:Updated:

Doctor Vikatan: சர்க்கரை தீவிரமானால் விரல் அகற்ற வேண்டுமா? விஜயகாந்துக்கு என்ன நடந்தது?

தொற்றானது ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க, சம்பந்தப்பட்ட உறுப்பை அகற்ற வேண்டியிருக்கும். நடிகர் விஜய்காந்த் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். 

விஜயகாந்த்
News
விஜயகாந்த்

சர்க்கரைநோய் தீவிரமானால் விரல்களை அகற்றும் நிலை வருமா? நடிகர் விஜய்காந்த் விஷயத்தில் அப்படி என்ன நடந்தது என விளக்க முடியுமா?

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மருத்துவர் சஃபி...

சர்க்கரைநோய் என்பது, வளர்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. கொரோனா மாதிரியோ, டைபாய்டு மாதிரியோ அது ஒரு தொற்றுநோயல்ல. சர்க்கரைநோய் வந்துவிட்டால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த மருந்துகள் கிடையாது. சர்க்கரைநோயைப் பொறுத்தவரை உடல் இயக்கத்தை சீராக்க முடியுமே தவிர, நோயைக் குணப்படுத்த வாய்ப்பில்லை.

நோயைக் குணப்படுத்த வாய்ப்பில்லாத நிலையில், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம். நடிகர் விஜயகாந்த் விஷயத்திலும் அவர் தன் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காமல் போயிருக்கலாம்.

சர்க்கரை நோயானது நம் ரத்தக்குழாய்களில்தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதை `எண்டோதீலியல் டிஸ்ஃபங்ஷன்' (Endothelial dysfunction) என்று சொல்வோம். இதனால் ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் தாக்கம் அதிகமிருக்கும்.

எனவே, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் ரத்தக்குழாய்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் சர்க்கரைநோயின் பாதிப்பு இருக்கும்.

டாக்டர் .சஃபி,M. சுலைமான்
டாக்டர் .சஃபி,M. சுலைமான்

உடலில் உள்ள அனைத்து ரத்தக்குழாய்களும் கால்கள் வரை சென்று ரத்தத்தைச் சுத்திகரிக்க மீண்டும் மேலே வர வேண்டும். வயதாக, ஆக சிலருக்கு கால்களில் உள்ள ரத்தக்குழாய்கள் இயல்பாகவே பலவீனமான இருக்கும். அத்துடன் சர்க்கரை நோயும் சேரும்போது `மேக்ரோ வாஸ்குலர் டிசீஸ்' மற்றும் `மைக்ரோ வாஸ்குலர் டிசீஸ்' போன்றவையும் வரும்.

மைக்ரோ வாஸ்குலர் டிசீஸ் பாதிப்பால் சரும வறட்சி, ரத்தம் சுத்திகரிக்கப்படும் தன்மை என எல்லாமே குறைவாக இருக்கும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்காத பட்சத்தில் பாத தசை அழிவு பாதிப்பும் (Gangrene) ஏற்படும்.

சிலருக்கு நகங்கள் மட்டும் பாதிக்கப்படலாம். சிலருக்கு சருமம் மட்டும் பாதிக்கப்படலாம். சிலருக்கு விரல்கள் மட்டும் பாதிக்கப்படலாம். இன்னும் சிலருக்கு கால்களும் பாதங்களும் முழுமையாக பாதிக்கப்படலாம்.

கால் விரல்களையோ, கால்களையோ அகற்றும் நிலை வராமலிருக்க ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது 'எண்டோதீலியல் டிஸ்ஃபங்ஷன்' பாதிப்பு வராது.

சர்க்கரைநோய்
சர்க்கரைநோய்

அதனால் ரத்தக்குழாய்களில் பாதிப்பு வராது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும். திசுக்களுக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் சீராக இருக்கும். அதன் காரணமாக தசை அழிவும் தவிர்க்கப்படும்.

ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொற்றுநோய்கள் எளிதில் பாதிக்கும். அந்த நோய்கள் தீவிரமடையும்.

அந்தத் தொற்றானது, ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவாமலிருக்க, சம்பந்தப்பட்ட உறுப்பை அகற்ற வேண்டியிருக்கும். நடிகர் விஜய்காந்த் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கால்களையும் பாதங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். செருப்பு அணியாமல் எங்கேயும் செல்லக்கூடாது. முன்பக்க விரல்களையும் குதிகால்களையும் மூடும்படியான காலணிகள் அணிவது அவசியம்.

பாதங்களில் ஏதேனும் உணர்ச்சிக் குறைபாடோ, மரத்துப்போன உணர்வோ தொடர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பாதம்
பாதம்
freepik

மரத்துப்போன நிலையில் முள்ளோ, கல்லோ குத்தினால் உணர்வு தெரியாது என்பதால், அது புண்ணாக மாறலாம். கால்களில் சின்ன புண் ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தக் கூடாது.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதைப் போல, பாதங்களையும் கழுவி சுத்தப்படுத்துவதை வழக்கமாக்க வேண்டும். கண்ணாடி வைத்து கால்களில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்து, மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தடவிக்கொண்டு படுப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.