Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை
News
உடல் எடை ( மாதிரி படம் )

பிரசவமான பெண்களுக்கு உணவில் நிறைய நெய் சேர்த்துக் கொடுப்பார்கள். டிரைஃப்ரூட்ஸ் லட்டு போன்றவற்றைக் கொடுப்பார்கள். பல சமூகங்களில் பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் உணவுகள் அதிக கலோரிகளும் கொழுப்பும் கொண்டதாக இருப்பதைப் பார்க்கலாம்.

Published:Updated:

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பிரசவமான பெண்களுக்கு உணவில் நிறைய நெய் சேர்த்துக் கொடுப்பார்கள். டிரைஃப்ரூட்ஸ் லட்டு போன்றவற்றைக் கொடுப்பார்கள். பல சமூகங்களில் பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் உணவுகள் அதிக கலோரிகளும் கொழுப்பும் கொண்டதாக இருப்பதைப் பார்க்கலாம்.

உடல் எடை
News
உடல் எடை ( மாதிரி படம் )

Doctor Vikatan: நான் இப்போது 6 மாத கர்ப்பிணி. பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பிரசவத்துக்குப் பிறக, எடை கூடாமலிருக்க வேண்டுமே என்ற கவலை பல பெண்களுக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆரோக்கியமான, சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டாலே எடை அதிகரிக்காது.

பிரசவமான பெண்களுக்கு உணவில் நிறைய நெய் சேர்த்துக் கொடுப்பார்கள். டிரைஃப்ரூட்ஸ் லட்டு போன்றவற்றைக் கொடுப்பார்கள். பல சமூகங்களில் பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் இத்தகைய உணவுகள் அதிக கலோரிகளும் கொழுப்பும் கொண்டதாக இருப்பதைப் பார்க்கலாம். இதை ஒட்டுமொத்தமாகத் தவறு என்று ஒதுக்க முடியாது.

காரணம், இதுபோன்ற உணவுகளில் `அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்' அதிகமிருக்கும். தாய்ப்பாலின் வழியே அவை குழந்தைக்குச் செல்வதால், குழந்தையின் உடல் எடை கூடும். எனவே, பிரசவமான அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு இப்படிச் சாப்பிடுவதில் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால், அத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதையும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்த்தாலே போதும்.

நிறைய திரவ உணவுகளையும், பூண்டு போன்று பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் அதிகம் சாப்பிடலாம். பிரசவித்த பெண்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு முதல் சில மாதங்களுக்கு தூங்கவே நேரம் இருக்காது. குழந்தை தூங்கும்போதுதான் தூங்க முடியும். ஆனாலும், அதையும் மீறி அவர்கள் உடற்பயிற்சிக்கென சிறிது நேரத்தை ஒதுக்கியே தீர வேண்டும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

குறைந்தபட்சமாக வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள இடத்தில் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தாலே மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. ஸ்ட்ரெஸ் குறையும். நன்றாகப் பசிக்கும். ஜங்க் உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு களையும் தவிர்ககவும். பிஸ்கட், பிரெட், கெட்ச்சப், சாஸ் போன்ற உணவுகளைத் தவிர்க்கவும்.

இயற்கையான பழங்கள், சிறுதானியங்கள், கஞ்சி, சூப் போன்றவற்றைச் சாப்பிட்டாலே எடையும் கூடாது, சத்துகளும் சீராக உடலில் சேரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.