Published:Updated:

Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்?

Diabetes
News
Diabetes ( Pixabay )

நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக வலியுறுத்தப்படும் சரிவிகித உணவுப் பழக்கம், உடலுழைப்பு போன்றவை எல்லோருக்கும் அவசியம்தான்.

Published:Updated:

Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்?

நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக வலியுறுத்தப்படும் சரிவிகித உணவுப் பழக்கம், உடலுழைப்பு போன்றவை எல்லோருக்கும் அவசியம்தான்.

Diabetes
News
Diabetes ( Pixabay )

Doctor Vikatan: உடல் உழைப்பாளிகளுக்கும் உணவுக் கட்டுப்பாடுடனும் இருப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வருகிறதே... என்ன காரணம்?

- Ramakumar, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.

மருத்துவர் சஃபி
மருத்துவர் சஃபி

நீரிழிவு என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி உடலுழைப்பு சார்ந்த நோயெல்லாம் இல்லை. அது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தமான ஒரு பாதிப்பு. அதாவது உடலியக்கம் சார்ந்த ஒரு பிரச்னை. எனவே உடலுழைப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு வரலாம். மரபியல் ரீதியாகவும் இந்த பாதிப்பு தொடரலாம்.

டைப் 1, டைப் 2, டைப் 1 ஏ, MODY (Maturity Onset Diabetes of Young), LADA (Latent Autoimmune Diabetes in Adults) என நீரிழிவில் 5 வகைகள் உள்ளன. இதில் எந்தவகையான நீரிழிவு யாருக்கு, எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவருக்கு நீரிழிவு பாதித்த பிறகுதான் அவருக்கு வந்துள்ளது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

Diabetes
Diabetes

நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். அப்படியானால் நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடலுழைப்பு உதவாதா என்று கேட்க வேண்டாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக வலியுறுத்தப்படும் சரிவிகித உணவுப் பழக்கம், உடலுழைப்பு போன்றவை எல்லோருக்கும் அவசியம்தான். நீரிழிவு வந்தபிறகும் இதே விதிகள் பொருந்தும். அதாவது, சரிவிகித உணவுப் பழக்கமும் முறையான உடற்பயிற்சிகளும் பின்பற்றப்பட்டால்தான் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.