Published:Updated:

நிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா? - கு.சிவராமன் விளக்கம்

Novel Coronavirus SARS-CoV-2
News
Novel Coronavirus SARS-CoV-2 ( Photo: AP )

நிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுமா? - கு.சிவராமன் விளக்கம்! #DoubtOfCommonman

Published:Updated:

நிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா? - கு.சிவராமன் விளக்கம்

நிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுமா? - கு.சிவராமன் விளக்கம்! #DoubtOfCommonman

Novel Coronavirus SARS-CoV-2
News
Novel Coronavirus SARS-CoV-2 ( Photo: AP )

இன்றைய தேதியில் இணையத்தில் மக்கள் அதிகம் தேடும் கேள்வியாக இருப்பது, `கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான். பிரச்னை என்னவெனில், இணையத்தின் குணமேயான `அடிப்படை ஆதாரமற்ற' பல தடுப்பு முறைகள் இவற்றுக்கான பதில்களாக இணையத்திலேயே உலா வருகின்றன. இந்த ஆதாரமற்ற பரப்புரைகளில், நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைகள், துளசி கஷாயம் போன்றவையாவும் கொரோனா வைரஸின் தாக்கத்தைத் தடுக்கும் என்ற தகவல் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

விகடன் வாசகரான துளசி ராகவன், விகடனின் #DoubtofCommonMan பக்கத்தில், இந்தக் கருத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேட்டிருந்தார். மேலும் நம் சித்த மருத்துவர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றனரா என்றும், கடந்த நாள்களில் தமிழகத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் கொரோனாவுக்கான சிகிச்சைகள் என்ன மாதிரியாக இருக்கும் என்றும் கேட்டிருந்தார்.
#DoubtofCommonMan
#DoubtofCommonMan

சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் நிலவேம்புக் குடிநீர் - பப்பாளி போன்றவை கொரோனாவைத் தடுக்கும் என்ற கருத்து குறித்துக் கேட்டோம்.

மருத்துவர் சிவராமன்
மருத்துவர் சிவராமன்

``முதல் விஷயம், கோவிட் - 19 கொரோனா வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்துமே ஆய்வுநிலையில்தான் இருக்கின்றன. கடந்த காலங்களில், கொரோனாவுக்கான குறிகுணங்கள் மற்றும் அறிகுறிகளோடு ஒத்துப்போகும் நோய் பாதிப்புகளுக்கான பட்டியலை, உலகம் முழுக்க இருக்கும் நவீன மற்றும் பாரம்பர்ய மருத்துவர்கள் எடுத்து வருகிறார்கள். கடந்த காலங்களில் அவற்றை அழிக்கத் தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு, இப்போதுள்ள இந்த கோவிட் - 19 கொரோனா வைரஸை அழிக்கும் முயற்சிகளை ஆய்வுகளாக மேற்கொள்கிறார்கள் அம்மருத்துவர்கள்.

இந்த ஆய்வுகளில், அலோபதி வகை மருத்துவம் மட்டுமே செயல்பட வேண்டுமென்று எந்த நியதியும் இல்லை. ஹோமியோபதி, சித்தா, யுனானி உட்பட அனைத்துப் பாரம்பர்ய மருத்துவ முறைகளும் இதில் ஈடுபடலாம். அந்த வகையில், நம் பாரம்பர்ய மருத்துவர்கள் `கொரோனா குறிகுணங்களோடு ஒத்துப்போகும் கடந்தகால நோய் பாதிப்புகளான டெங்கு - பன்றிக்காய்ச்சல் - சிக்கன் குனியா போன்றவற்றுக்குத் தரப்பட்ட நிலவேம்புக் கஷாயம், துளசி, கபசூர குடிநீர், விஷசூர குடிநீர் போன்றவை கோவிட் -19 கொரோனாவை அழிக்கின்றனவா எனப் பார்க்கிறார்கள். இதுவும், ஆய்வுகளின் ஒருபகுதியே என்பதால், இவற்றை கோவிட் - 19 கொரோனாவுக்கான மருந்தெனக் குறிப்பிடவோ பரிந்துரைக்கவோ முடியாது. இவையாவும் ஆய்வுகளும் அனுமானங்களும்தான்!

கொரோனா வைரஸ் சிகிச்சை
கொரோனா வைரஸ் சிகிச்சை

ஆங்கில மருத்துவத்திலும் இதேதான் செய்யப்படுகிறது. அவர்கள், ஹெச்.ஐ.வி - சார்ஸ் போன்ற கடந்தகால நோய்களுக்குத் தயாரிக்கப்பட்ட மருந்துகளை, இப்போதுள்ள இந்தக் கொரோனாவுக்குத் தந்து பார்க்கிறார்கள். அவையும்கூட ஆய்வும் அனுமானமும்தான்.

#DoubtofCommonMan
#DoubtofCommonMan

உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் குறிப்பிட்டிருக்கும் முக்கியமான விஷயம், உங்களின் மூச்சுக்குழாய் - நுரையீரல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை எப்போதும் உறுதி செய்துகொள்ளுங்கள் என்பது. இதை அவர்கள் குறிப்பிட முக்கியக் காரணம்,

கோவிட் - 19 சுவாசக்குழாயில் ஏற்படும் ஒரு தொற்றுப்பிரச்னை. அந்த வகையில், நிலவேம்புக் குடிநீர் - பப்பாளி இலைச்சாறு போன்றவை யாவும் சுவாசக்குழாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் முக்கியமான மருந்துகள்.

கொரோனாவை முழுமையாகத் தடுக்காது என்றபோதிலும், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பதால், கொரோனா உட்பட பிற நோய்த்தொற்றுகள் உங்களைத் தாக்குதவதற்கான சதவிகிதத்தையும் குறைக்கும்" என்றார்.

பப்பாளி இலை
பப்பாளி இலை

கோவிட் - 19 கொரோனாவுக்கான சிகிச்சை குறித்து பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா நம்மிடம் பேசும்போது,

``நேரடியாக வைரஸை அழிப்பதற்கான மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், சப்போர்ட்டிவ் கேர் முறை மூலமாக வைரஸ் உடலிலிருந்து முழுமையாக அழிக்கப்பட்டுவிடுகிறது. சப்போர்ட்டிவ் கேர் என்பது, தொற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள்/உடல் சார்ந்த பிற பாதிப்புகளை குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள். உதாரணமாக, கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, உடலில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் வென்டிலேட்டர் வழி சிகிச்சைகள் தரப்படும். இப்படி எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் பிரச்னை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் ஆரோக்கியத்தை மீட்பதற்கான அலோபதி வழி சிகிச்சைகள் நடைபெறும்.

சுயசுத்தம் மட்டுமே கோவிட் - 19 கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும்.
டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா
#DoubtofCommonMan
#DoubtofCommonMan

வைரஸை நேரடியாக அழிப்பதற்கான மருந்துகள் கண்டறியப்பட, சில மாதங்கள் ஆகலாம் என்பதால் அதுவரை இந்த சப்போர்ட்டிவ் கேர் வழி சிகிச்சை தரப்படும்.

சப்போர்ட்டிவ் கேர்
சப்போர்ட்டிவ் கேர்

அதுவரை,

மக்கள் ஆதாரமற்ற எந்தத் தகவல்களையும் நம்பாமல், உங்களின் சுயசுத்தத்தை உறுதிசெய்யுங்கள்.

சுயசுத்தம் மட்டுமே நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும். ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டாலும், மருத்துவரை அணுகி, சப்போர்ட்டிவ் கேர் முறை மூலமாக சிகிச்சைகளைத் தொடருங்கள். மேற்சொன்ன சப்போர்ட்டிவ் கேர் மூலமாக, இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65,700 க்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளதுனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சரிபாதி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே சிகிச்சை குறித்து பயமேதும் வேண்டாம்" என்றார் அவர்.

உயிரைப் பறிக்குமா கொரோனா... ? தடுக்கவும் தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. வீடியோ : அபிநய சௌந்தர்யா #Health #Coronavirus #COVID19

Posted by Vikatan EMagazine on Tuesday, March 10, 2020
#DoubtofCommonMan
#DoubtofCommonMan

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!