Published:Updated:

PMSBY திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
News
விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டம் ஒரு விபத்து காப்பீட்டுத் திட்டம்.

Published:Updated:

PMSBY திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டம் ஒரு விபத்து காப்பீட்டுத் திட்டம்.

விபத்துக் காப்பீட்டுத் திட்டம்
News
விபத்துக் காப்பீட்டுத் திட்டம்

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சிவநேசன் என்ற வாசகர், "PMSBY (பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கணக்குள்ள வங்கியில் எழுதிக் கொடுத்தபின் சரியான பதில் வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு திட்டங்கள் குறைந்த பிரீமியம் தொகையில் உள்ளன. பலருக்கு இத்திட்டங்கள் பற்றித் தெரிவதில்லை. அப்படி ஒரு திட்டத்தைப் பற்றித் தான் வாசகர் கேள்வி எழுப்பி உள்ளார். வாசகரின் கேள்விக்கான பதிலை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலின் துணைத்தலைவர் பாலாஜி பாபுவிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, " மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டம் ஒரு விபத்து காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் 18 முதல் 70 வயது வரம்பில் உள்ள குறைந்த வருமானம் உடையவர்கள் இணைந்து கொள்ளலாம். விபத்தினால் மரணம் அல்லது முழு ஊனமடைந்தால் இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு தொகை நாமினிக்கு வழங்கப்படும். விபத்தினால் பகுதியாகக் குறைபாடு ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். தற்கொலையால் இறப்பு ஏற்பட்டால் அதற்குக் காப்பீடு தொகை வழங்கப்பட மாட்டாது. இத்திட்டத்திற்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே. இந்தப் பிரீமியம் தொகையானது வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்துகொள்ளப்படும்.

PMSBY
PMSBY

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBJ) திட்டத்தில் நெட் பேங்கிங் மூலம், எஸ்.எம்.எஸ். மூலம் அல்லது நேரடியாக வங்கியில் படிவத்தைச் சமர்ப்பித்தும் இணைந்துகொள்ளலாம். திட்டத்தின் காப்பீடு தொகையைப் பெறுவதற்கு அதற்கான படிவத்தை (Claim Form) பூர்த்தி செய்து எந்த வங்கிக் கணக்கை இத்திட்டத்தில் இணைத்துள்ளீர்களோ, அந்த வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம் (Application form) மற்றும் காப்பீடு கோருவதற்கான படிவத்தை (Claim Form) கீழ்காணும் இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் (https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx).

Pradhan Mantri Suraksha Bima Yojana
Pradhan Mantri Suraksha Bima Yojana

விபத்தினால் இறந்திருந்தால் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ், அல்லது விபத்தினால் ஊனமுற்றிருந்தால் அதற்கான மருத்துவரின் சான்றிதழைப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபத்தினால் பதியப்பட்ட FIR மற்றும் மருத்துவமனை டிஸ்சார்ஜ் வவுச்சரையும் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்து, கோரப்பட்டுள்ள மற்ற ஆவணங்களுடன் படிவத்தை விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கியிலிருந்து சரியான பதில் வரவில்லை எனில் காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது காப்பீட்டு இணையதளத்தில் (https://jansuraksha.gov.in/ContactUs.aspx) கொடுக்கப்பட்டுள்ள டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம்." என்று கூறினார்

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man