Published:Updated:

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி? | Doubt of Common Man

Covid Vaccination
News
Covid Vaccination ( AP Photo/Altaf Qadri )

கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

Published:Updated:

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி? | Doubt of Common Man

கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

Covid Vaccination
News
Covid Vaccination ( AP Photo/Altaf Qadri )
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் முருகமணி என்ற வாசகர், "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழை அரசு வழங்கி வருகிறது. இனி வரும் நாட்களில் நாம் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி சான்றிதழும் முக்கியமாக ஒரு ஆவணமாகப் பார்க்கப்படும். இப்போதே பல மாநிலங்களில் வேறு மாநிலங்களில் இருந்து பயணம் செய்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

Covid -19 Vaccine
Covid -19 Vaccine
AP Photo

கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் பல வழிகளில் நம்மால் தரவிறக்கம் செய்ய முடியும். கோவின் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், ஆரோக்கிய சேது அல்லது உமாங்க் செயலிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம், டிஜிலாக்கர் தளத்தின் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். எதுவுமே இல்லை என்றால் வாட்ஸ்அப்பின் மூலம் கூட கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பெற முடியும். கோவின் இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ் பெறுவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளைப் பார்க்கலாம்.

கோவின் இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் கோவின் இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும் (இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

மேல்பக்கம் வலதுபுற மூலையில் இருக்கும் Register / Sign in-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

கோவின் இணையதளம்
கோவின் இணையதளம்

அதனைத் தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் நமது மொபைல் எண்ணைக் கொடுத்து, அதற்கு வரும் OTP-யையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வரும் பக்கத்தில் நாம் எத்தனை டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம், எந்தத் தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறோம் போன்ற நம்முடைய விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன்கீழே Certificate என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் நம்முடைய தடுப்பூசிச் சான்றிதழ் பதிவிறக்கம் ஆகிவிடும்.

வாட்ஸ் அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைப் பெறுவது எப்படி?

நம்முடைய மொபைலில் 90131 51515 என்ற எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ் அப்பில் மேலே குறிப்பிட்டிருக்கும் எண்ணுக்கு 'Hi' எனக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதற்கு மறுமொழியாக கொரோனா தொடர்பான என்ன தகவல் வேண்டும் எனக் கேட்டு ஒரு பட்டியலை அளிக்கும். அந்தப் பட்டியலில் இரண்டாவது ஆப்ஷனாக இருக்கும் Book Appointment, Download Certificate என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இங்கு நாம் விரும்பிய ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதற்கு, அந்த பட்டியல் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த எண்ணை நாம் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசிச் சான்றிதழ் பெறுதல்
வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசிச் சான்றிதழ் பெறுதல்

அடுத்து வரும் மறுமொழியில் மீண்டும் Download Covid Vaccination Certificate என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பின்னர் நம்முடைய எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த OTP-யை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் யாருடைய தடுப்பூசிச் சான்றிதழ் வேண்டும் எனக் கேட்கும். அதில் நம்முடைய விருப்பத்தைக் கொடுத்தால், நம்முடைய தடுப்பூசிச் சான்றிதழ் வாட்ஸ்அப்பிலேயே நமக்கு அனுப்பப்படும்.

நாம் தடுப்பூசி செலுத்தும் போது எந்த எண்ணைக் கொடுத்திருந்தோமோ அதே எண்ணைக் கொண்ட வாட்ஸ்அப் கணக்கில் இருந்து மேற்கூறிய செயல்முறையைச் செய்தால் மட்டுமே நம்மால் சான்றிதழைப் பெற முடியும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man