Published:Updated:

நான் எனது உடலை தானம் செய்ய விரும்புகிறேன்; என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

உடல் தானம்
News
உடல் தானம்

உடல் உறுப்பு தானத்திற்கும், உடல் தானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

Published:Updated:

நான் எனது உடலை தானம் செய்ய விரும்புகிறேன்; என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

உடல் உறுப்பு தானத்திற்கும், உடல் தானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

உடல் தானம்
News
உடல் தானம்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் தாஸ் என்ற வாசகர், "நான் எனது உடலை தானம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

உடல் உறுப்பு தானம் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலர், உடல் உறுப்புகளை தானம் செய்யப் பதிவு செய்துகூட வைத்திருப்போம். ஆனால், உடல் தானம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால் 'அது தானே இது' என உடல் உறுப்பு தானத்தையே, உடல் தானமாகக் குறிப்பிடுவோம். நமது வாசகர் ஒருவருக்கு உடல் தானம் எப்படிச் செய்வது என்ற சந்தேகம் இருந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார். முதல் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் இரண்டிற்குமான வித்தியாசத்தைப் பார்த்து விட்டு எப்படி உடல் தானம் செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

தானம்
தானம்

உடல் உறுப்பு தானத்திற்கும், உடல் தானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உடல் உறுப்பு தானம் என்பது நமது உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்திற்குப் பின்பு மற்றவர்களுடைய பயன்பாட்டிற்காகத் தானமாக வழங்குவது. ஆனால், உடல் தானம் என்பது, நமது உடலையே படிப்பிற்காகத் தானமாக வழங்குவது. முதலாமாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் முதலில் ஒரு மனித உடலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் மருத்துவத்தைப் பற்றி அவர்கள் படிக்க முடியும். உடல் தானம் வழங்குபவர்கள் அந்த மருத்துவ படிப்பு மாணவர்களுக்குத் தான் தங்கள் உடல்களைத் தானமாக வழங்குகிறார்கள். நாம் தானமாக வழங்கக்கூடிய உடலை வைத்து மாணவர்களுக்கு நமது உடல் குறித்துக் கற்பிக்கப்படும்.

மூளைச் சாவு அடைந்திருந்தால் மட்டுமே இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களை தானம் செய்ய முடியும். இயற்கை மரணமடைந்தால் கண் தானம் செய்யலாம். ஆனால் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியாது. அதேசமயம் இயற்கை மரணம் எய்தினால் உடல் தானம் செய்ய முடியும்.

சரி, உடல் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் இரண்டிற்குமான வேறுபாட்டைப் பார்த்தோம். இப்போது நம் வாசகரின் கேள்விக்கு வருவோம். உடலை தானம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற நம் வாசகரின் கேள்வியை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, "இறந்த பிறகு தானம் செய்யப்படும் உடல்கள் மருத்துவ மாணவர்களின் உடற் கூறாய்வு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் உடலை இறந்த பிறகு தானம் செய்ய விரும்புபவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைக்குச் சென்று உடல் தானத்திற்கான படிவத்தைப் பெற்று பூர்த்திசெய்து தர வேண்டும். இறந்த பிறகு உடலை தானம் செய்யச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் உறுதிச் சான்றில் கையொப்பம் இட்டு, கோரப்படும் மற்ற தகவல்களையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறந்த பிறகு உடலைப் புதைப்பதற்கு முன்பு அல்லது தகனம் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய மதச் சடங்குகளைச் செய்துகொள்ளலாம். அதன் பிறகு உடலை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன்
ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன்

உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் உடல் தானம் செய்யச் சம்மதிப்பவர்களின் உடல்கள் அவர்கள் இறந்த பிறகு தானம் செய்யப்படாமலும் போகிறது. தானம் செய்பவர், தான் உடல் தானம் செய்திருப்பதை தங்கள் குடும்பத்தினரிடம் அல்லது தனக்கு நெருக்கமானவர்களிடமாவது தெரிவிப்பது நல்லது. தானம் செய்தவர் இறந்த பிறகு அந்தத் தகவலை மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களை உடல் தானம் அளிப்பவர் குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களுக்கு முன்பே தெரிவிப்பதும் அவசியம். மேலும், உடல் தானம் குறித்து அறிந்தவர்களும் தங்களுடைய உடலையும், உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முன்வரவேண்டும்." என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man