Published:Updated:

கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்? | Doubt of Common Man

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களுக்குத் தினம்தோறும் ஏகப்பட்ட சந்தேகங்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. நமது வாசகர் ஒருவருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது.

Published:Updated:

கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்? | Doubt of Common Man

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களுக்குத் தினம்தோறும் ஏகப்பட்ட சந்தேகங்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. நமது வாசகர் ஒருவருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
News
கொரோனா தடுப்பூசி
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் விக்டர் என்ற வாசகர், "கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை அச்சுறுத்தலான நிலையிலேயே வைத்திருக்கிறது. கொரோனாவைத் தடுக்க உலகெங்கும் பல நாடுகளும் பல புதிய தடுப்பூசிகளை உருவாக்கி மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அதிகளவில் மக்களுக்குச் செலுத்தி வருகிறது இந்திய அரசு. மக்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் அரசும், மருத்துவர்களும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தடுப்பூசி குறித்த சரியான ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்கள். ஆனாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களுக்குத் தினம்தோறும் ஏகப்பட்ட சந்தேகங்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. நமது வாசகர் ஒருவருக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

நமது வாசகருக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தோம். இது குறித்து அவர் கூறியது, "கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 90 நாள்கள் கழித்து நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், நமக்கு கொரோனா பரிசோதனையான RT-PCR சோதனை செய்து பாசிட்டிவ் என ரிசல்ட் வந்த அந்த நாளிலிருந்து, சரியாக 90 நாள்கள் முடிந்த பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்களுக்கு, 90 நாள்கள் வரை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான எதிர்ப்புச் சக்தி இயல்பாகவே இருக்கும். அதனால் 90 நாள்கள் கழிந்த பின் நாம் கொரோனாவிற்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எந்த இணை நோய்கள் இருந்தாலும், 18-க்கு மேல் எந்த வயதினராக இருந்தாலும் மருத்துவரை ஆலோசித்து 90 நாள்களுக்குப் பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் நல்லது" எனக் கூறினார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man