ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த் : சர்க்கரைநோயை சமாளிப்பது ஈஸி!

சர்க்கரை நோயாளி
பிரீமியம் ஸ்டோரி
News
சர்க்கரை நோயாளி

சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி இன்றியமையாதது.

  • தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி என்றதும், ஜிம்முக்குப் போய் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி, டிரெட்மில்லில் வியர்க்க விறுவிறுக்க ஓட வேண்டும் என்று அர்த்தமில்லை. அன்றாடச் செயல்பாடுகளையே உடற்பயிற்சியாக மாற்றிக்கொள்ளலாம்.

ஹெல்த் : சர்க்கரைநோயை சமாளிப்பது ஈஸி!
  • நடக்கும்போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் காட்டும் பெடோமீட்டர் (Pedometer) கருவி அணிந்துகொள்ளலாம் அல்லது எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடும் ஆப்களை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஒரு நாளைக்கு 10,000 அடிகளாவது நடக்க வேண்டும்.

  • வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, பொருள்களை அடுக்கிவைப்பது போன்ற வேலைகளையெல்லாம் விறுவிறுப்புடன் உடற்பயிற்சிபோலச் செய்யலாம்.

  • அலுவலக இருக்கையிலிருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, 5 நிமிடங்கள் குட்டி நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம், சமதளத்திலும் நடக்கலாம்.

ஹெல்த் : சர்க்கரைநோயை சமாளிப்பது ஈஸி!
  • தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, விளம்பர இடைவேளைகளில் இருக்கையிலிருந்து எழுந்து அறையில் நடக்கலாம்.

  • செல்போனில் பேசும்போதெல்லாம் நடந்துகொண்டே பேசலாம்.

  • அலுவலக மீட்டிங்கை உட்கார்ந்தபடியே நடத்தாமல் நின்றுகொண்டும் நடத்தலாம்.

  • தினமும் காலை அல்லது மாலையில்

  • 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்வது நல்லது.

  • `லிஃப்ட், எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்துவதில்லை, எங்கேயும் எப்போதும் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதே பாலிசி’ என உறுதிகொள்ளலாம்.