திரைப்படத் தயாரிப்பாளரான சேகர் கபூர் (Shekhar Kapur), தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தனக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருப்பது குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்குப் பாடம் கற்பித்த, வாழ்வின் முக்கியமான பகுதிகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.
வாழ்க்கைப் பாடம் என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பதிவில், ``நான் முற்றிலும் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவன். அதிகமான கலைஞர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.
செயற்கை நுண்ணறிவுடன் (AI) நான் விஷுவல் கணிதத்தின் மீது ஈர்ப்பை வளர்த்துக் கொண்டேன். ஆனால், பள்ளியில் கணிதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டேன்... டிஸ்லெக்ஸியா எண்கள் சிறிது அர்த்தமுள்ளதாக இருந்தன’’ என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்துக் குறைபாடு அல்லது கற்றல் குறைபாடான டிஸ்லெக்ஸியா பாதிப்பு கொண்டவர்கள், வார்த்தைகளைப் படிக்க, எழுத்துகளின் ஓசையைப் புரிந்து கொள்ளச் சிக்கல்களை எதிர்கொள்வதுண்டு. இதனால் படிப்பின் மீது ஆர்வம் குறைவதற்கும் வாய்ப்புண்டு.
இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இப்பதிவுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.