'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் ஜிலீர் நாயகி அகிலா கிஷோர்.

'நான் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, சும்மா ஒரு ஜாலிக்காக மாடலிங் பண்ணிட்டு இருந்தப்போ, 'மிஸ் குயின் ஆஃப் இந்தியா’ போட்டியில் பட்டம் ஜெயிச்சேன். அதுக்குப் பிறகு சினிமா என்ட்ரி. நானா எதுவும் பிளான் பண்ணலை, எல்லாம் தானா நடக்குது'' எனக் கண் சிமிட்டி சிரிக்கிறார்.

'ஃபிட்டா இருக்க என்னென்ன உடற்பயிற்சி செய்யறீங்க?'

'என்னை ஃபிட்டாகவும் அழகாகவும் வெச்சிருக்கிறது ஸ்போர்ட்ஸ்தான். 5.9அடி இருக்கிற என் உயரமும் ஒரு ப்ளஸ். காலேஜ்ல எந்த விளையாட்டுப் போட்டினாலும், நான்தான் முதல் ஆளா கலந்துக்குவேன். தன்னம்பிக்கை, விடா முயற்சின்னு நிறைய விஷயங்களை விளையாட்டுதான் எனக்குக் கத்துக் கொடுத்தது.

நான் பெஸ்ட் பேஸ்கட் பால் பிளேயரும்கூட. ஆனா, சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம், பேஸ்கட் பால் ரெகுலரா விளையாட முடியாமப்போச்சு. இப்பவும், கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைச்சாப் போதும். உடனே, பேஸ்கட் பால் கோர்ட் போய், பயிற்சி எடுத்துப்பேன்.

டெய்லி அஞ்சு கிலோ மீட்டராவது ரன்னிங் போவேன். வேலை இருந்தாலோ, ஷூட்டிங்ல பிஸியானாலோ, டிரட் மில்லில் ஓடுவேன். எனக்கு பீச் சைடு ரன்னிங் போக ரொம்பப் பிடிக்கும். ஆனா, பெங்களூர்லதான் பீச்சே இல்லை. அதனால பீச் பக்கம் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம், ஆசை தீர ரன்னிங் போவேன். தினமும் இப்படி ஒடுறதுனால உடம்பில் ரத்த ஓட்டம்அதிகமா பாயும். முகமும் பளபளப்பாகும்.

டைம் கிடைக்கிறப்ப, ஸ்விம் பண்ணுவேன். ஸ்விம் பண்ணும்போது மனசும் உடலும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதை உணர முடியும்.

என் அம்மா ஒரு ஃபிட்னெஸ் கோச்சர். என்னை யோகா பண்ணச் சொல்லிட்டே இருப்பாங்க. சீக்கிரமே யோகாவும் கத்துக்க ஆரம்பிக்கணும். அவங்க சொல்லித்தான், கொஞ்ச நாளா கிக் பாக்ஸிங் கிளாஸ் போறேன். பாக்ஸிங் கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு. உடம்பை ஃபிட்டா வெச்சுக்க வொர்க் அவுட் செய்த மாதிரியும் ஆச்சு. உடம்பைக் குறைக்க ஜிம் போறவங்க ஒரு வாரம் வொர்க் அவுட் பண்ணிட்டு உடம்புல எந்த மாற்றமும் இல்லைனு தளர்ந்துடறாங்க. உடம்பை ஏத்துறதுக்கும், குறைக்கிறதுக்கும் ரொம்ப நாள் பிடிக்கும். பொறுமையா இருந்தா மட்டும்தான் எதிர்பார்த்த மாதிரி ஆக முடியும்.'

'உங்க டயட் பத்தி சொல்லுங்க...'

'இரவு உணவுக்கு பிறகு கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கழிச்சுதான், நாம காலை உணவை எடுத்துப்போம். இவ்வளவு நேரம் இடைவெளிவிட்டு சாப்பிடறதாலதான் காலை உணவை, 'பிரேக்ஃ பாஸ்ட்’னு சொல்றோம். அதனால, நான் எப்பவுமே காலையில நிறைய உணவு எடுத்துப்பேன். தினமும் காலையில் ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, முட்டையின் வெள்ளைப் பகுதி ரெண்டு, ஆரஞ்சு இல்லைனா பப்பாளி ஜுஸ், கோதுமை பிரட் இரண்டு ஸ்லைஸ் சாப்பிடுவேன்.

ஒட்ஸ் கஞ்சி சாப்பிடுறதால, உடல் எடை அதிகரிக்காது. அந்த நாள் முழுக்க நமக்குத் தேவையான சத்தைக் கொடுக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் புரோட்டின் நிறைய இருக்கு. ஆனா மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், அதைத் தவிர்த்துடுவேன். ஆரஞ்சு ஜுஸ் சுறுசுறுப்பா இயங்க உதவும்.

மதியத்துக்கு ரெண்டு சப்பாத்தி மட்டும் காய்கறிகளுடன் எடுத்துப்பேன். சாயங்காலம் கொஞ்சம் டிரை ஃப்ரூட்ஸும், கூடவே ஆரஞ்சு அல்லது தர்பூசணி ஜூஸ் எடுத்துப்பேன். இடைவெளியில் கிரின் டீ, பிஸ்கட்!

இரவில் ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் பழங்கள் அவ்வளவுதான். '

'அழகுக்காக பிரத்யேகமாக ஏதும் செய்வீங்களா?'

'அழகு என்பது தன்னம்பிக்கைதான். நாம எவ்வளவு தன்னம்பிக்கையா இருக்கமோ, அவ்வளவு அழகா தெரிவோம். பேசிக் மேக்கப், அப்பப்ப பார்லர் அவ்வளவுதான். எல்லா நாளும் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்யுங்க. தன்னம்பிக்கையோட எதையும் எதிர்கொள்ளுங்க. அதுவே உங்களை அழகா வெச்சிருக்கும்.'