ஸ்பெஷல்
Published:Updated:

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

லதா - பபிதா, ஏரோபிக் ட்ரெயினர்ஸ் விமன்ஸ் வேர்ல்டு

வாக்கிங் போவதால் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு எடை குறைந்துவிடாது. ஜிம் போனால் முதல் நாட்களின் வலியே, தொடர்ந்து போக முடியாதபடி செய்துவிடுகிறது. செய்வதற்குப் போரடிக்காத, வலிக்காத, சந்தோஷமான பயிற்சியாக இருக்க வேண்டும். அதே சமயம் அது உடற்பயிற்சியாகவும், எடை குறைப்பதாகவும் இருக்க வேண்டும். 'நான் என்னதான் செய்வது' என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதில்தான் ஏரோபிக்ஸ்.

 மியூஸிக் கேட்டபடியே நடனமாடி உடற்பயிற்சி செய்யும்போது, களைப்பே தெரியாது. ஆனால் எதிர்பார்த்த பலன் இருக்கும். கூடவே மனசும் ரிலாக்ஸாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்தால், நளினமான உடல் நிச்சயம்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

குறிப்புகள்:

மாதவிலக்கு சமயத்தில் ஏரோபிக்ஸ் செய்ய வேண்டாம். கர்ப்பிணிகள் செய்யக் கூடாது.

100 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்கள் குறைந்த மூவ்மென்ட்களோடு, மெதுவாகப் பயிற்சி செய்யலாம்.

மூட்டில் தசைநார் கிழிந்திருந்தால், செய்யக் கூடாது. குணமானதும் மருத்துவரின் ஆலோசனை பெற்று, பிறகு பயிற்சியை மேற்கொள்ளலாம்.

முதுகுவலி இருப்பவர்கள், அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்று, ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

ஏரோபிக்ஸ் பயன்கள்:

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!
ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடல் முழுவதும் இயங்குவதால் கழிவுகள் வியர்வையின் மூலம் வெளியேறும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடல் வளைந்து கொடுக்கும் அளவுக்குப் பக்குவம்பெறும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  பசி உணர்வு இல்லாதவர்களுக்கு, அந்தப் பிரச்னை நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகப் பாயும்

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறையை  (Sedentary lifestyle) வாழ்வோருக்கு, ஏற்ற உடற்பயிற்சி ஏரோபிக்ஸ் என்பதால், லைஃப்ஸ்டைல் நோய்கள் வர வாய்ப்புகள் குறைவு.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  வடிவமே இல்லாத உடல் அமைப்பு இருந்தால், இந்தப் பயிற்சியின் மூலம் அழகான கட்டுடல் பெறுவது உறுதி.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  தசைநார்கள் வலுவடையும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  இதயத் துடிப்பு சீராகும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை அளிக்கிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  சோகம், கவலை, தூக்கமின்மை போன்ற மனநலப் பிரச்னைகள் நீங்கும்.

ஏரோபிக்ஸ் இசையோடு இணைந்த அசைவு!

  தொடர்ந்து ஏரோபிக் பயிற்சியில் ஈடுபடும்போது, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், புற்றுநோய், உடல்பருமன் போன்ற நோய்கள் வராது.

                                    ப்ரீத்தி

       படங்கள்: இரா. யோகேஷ்வரன்