கன்சல்டிங் ரூம்
Published:Updated:

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

ஃபிட்னெஸ்

அருண்விஜய் ஃபிட்னெஸ் ரகசியம்

‘என்னை அறிந்தால்’ வெற்றியோடு, தன் நடிப்பும் கொண்டாடப்பட்ட இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்  அருண் விஜய்.  ‘‘என் கேரியர்லயே இந்தப் படத்துக்குதான் இவ்ளோ வொர்க் அவுட் பண்ணேன்’’  எனச் சிரிக்கிறார். அதிகம் மெனக்கெட்டு இன்ச் இன்ச்சாக செதுக்கிய உடம்பில் அவரது உழைப்பு தெரிகிறது.

“பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸில் ஆர்வம் அதிகம். ஸ்போர்ட்ஸ், கேம்ஸ், டான்ஸ், கல்ச்சுரல்ஸ்னு  எதையும் விட மாட்டேன். ஏதாவது ஒரு மார்ஷியல் ஆர்ட் கத்துக்கணும்னு நினைச்சு, கராத்தே கத்துக்கிட்டேன். வீட்ல என் சிஸ்டர்ஸ்க்கு பரதம் கத்துக்கொடுக்க மாஸ்டர் வந்தார். அப்படியே நானும் கத்துக்கிட்டேன். நடனம் ஆடறப்போ, தாளத்தின் மீதும் மனசு பதியணும்கிறது மாதிரியான  பரதத்தின் அடிப்படைகளை மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். தொடர்ந்து பரதம் ஆடிகிட்டே இருந்தால், உடல்மொழி மாறிடும்.  அதனால், அடிப்படையோடு நிறுத்தியாச்சு.  பிறகு, வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக்கொண்டேன்.
 

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

ஃபிட்டா இருக்கணும்கிற எண்ணம் எப்போதுமே உண்டு. ஸ்கூல் படிக்கும்போதே, தினமும் ஒரு மணி நேரம் வொர்க்அவுட், அரை மணி நேரம் ஸ்கிப்பிங்னு பயிற்சிசெய்வேன். அப்பாதான்  அதுக்கு  இன்ஸ்பிரேஷன். சினிமாவுக்கு வந்த பிறகுதான், அதிக நேரம் வொர்க்அவுட் செய்ய ஆரம்பிச்சேன். ஒரு நாள் வொர்க்அவுட் செய்யாமல் போனால், என்னவோ போல ஆயிடும். சின்ன ஊர்களுக்குப் போகும்போது, என்னோட வொர்க்அவுட் கிட்-ஐ  எடுத்துக்கிட்டுப் போயிடுவேன். டிரெட் மில் இல்லைன்னா, அதுக்கு பதிலாக ஸ்கிப்பிங் செய்வேன். டம்பெல்ஸ் அதிகமா செய்வேன்.

‘என்னை அறிந்தால்’ படத்துக்காக சிக்ஸ் பேக் வெச்சிருந்தேன். இந்தப் படத்துக்காக, தினமும் ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல், கடுமையாகப் பயிற்சிசெய்தேன். சிக்ஸ்பேக் கொண்டுவர ஆறு மாதங்கள் ஆனது.  70 சதவிகிதம் டயட், 30 சதவிகிதம் உடற்பயிற்சி. இதுதான் என் ஃபிட்னெஸ் சீக்ரெட். பொறுமையாக இருந்தால், நாம் ஆசைப்பட்ட நிலைக்கு உடலைக் கொண்டுவரலாம்.

உடற்பயிற்சி செய்யும்போது தினமும் அவசியம் ஏழு மணி நேரம் தூங்கணும். கூடவே, உணவுக் கட்டுப்பாடும் இருந்தால், விரும்பிய உடல்வாகைப் பெறலாம். அடிப்படையில் நம் உடலைப் பற்றி நமக்குத் தெரிஞ்சிருந்தா போதும்... எந்த உணவை சாப்பிட்டா நல்லது. எந்த உணவை சாப்பிட்டா இளைப்போம்; எந்த உணவை சாப்பிட்டா  ஆகாதுன்னு அதுவே நமக்குச் சொல்லும். 

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

உணவு விஷயத்துல ரொம்ப கண்ட்ரோலா இருப்பேன்.  பேலன்ஸ்டு டயட்தான் என்னோடது.  எண்ணெயில் பொரிக்காத ஸ்டீம்டு ஃபிஷ், ஸ்டீம்டு சிக்கன்தான்  என்னோட ஃபேவரைட்.  காய்கறிகள், பழங்கள், சப்பாத்தி தால். வாரத்துக்கு ஓரிரு நாள்தான் அரிசி சாப்பிடுவேன். அரிசியில் கிடைக்கிற கார்போஹைட்ரேட்டை உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலமா பேலன்ஸ் பண்ணிப்பேன்.

“காலையில்  ஐந்து முட்டைகளின் வெள்ளைப் பகுதி, சாலமன் மீன்கள் கொஞ்சம்.  மதியத்துக்கு கேரட், பீன்ஸ், கீரை, புரோகோலி கலந்த கலவையோடு மூணு சப்பாத்தி, கொஞ்சம் வேகவைத்த சிக்கன் எடுத்துக்குவேன்... இரவு, சப்பாத்தியோடு ஆப்பிள், பைனாப்பிள், ஆரஞ்ச், பேரீச்சம் பழங்களைக் கலந்து சாப்பிடுவேன்.  வாழைப்பழத்தில் கலோரி அதிகம். அதைத் தவிர எல்லா பழங்களையும் எடுத்துப்பேன்.  நிறைய தண்ணீர் குடிப்பேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும், வீடுதான் எனக்கு ஓய்வையும் மன அமைதியையும் தரும் இடம். நேரம் கிடைக்கும்போது, கிச்சனுக்குப் போய், சமைப்பேன். ஒருமுறை, என் சமையலை சாப்
பிட்ட அஜித் சார்,  ‘மறுபடியும் உங்க சமையல் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு’னு பாராட்டினார். சமைப்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதனால்  எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தாலும் அதிலிருந்து வெளியேறி ஃப்ரெஷ் ஆயிடுவேன்.

என்னை அறிந்தேன்....70%டயட்...30% உடற்பயிற்சி

மனசை ரிலாக்ஸ்டா வெச்சுக்க எங்காவது டிரைவிங் போவேன். எந்த மாதிரியான வேலையா இருந்தாலும், அதை சின்சியரா லவ் பண்ணி செய்வேன். அதிகம் பதற்றப்பட மாட்டேன்.
என் வேலைகளில் நான் ரொம்ப ஃபோக்கஸ்டா, விஷனா இருக்கிறேன். இதனால, விமர்சனங்கள் என்னை ஒன்றும் செய்யாது.என்னோட நடிக்க வந்தவங்கல்லாம் எங்கயோ போயிட்டாங்க. நமக்கு மட்டும் நல்லதே நடக்க மாட்டேங்குதேன்னு சோர்ந்து போனதில்லை.

ஏன்னா என்னோட ஒர்க்கை நான் நூறு சதவீதம் சரியாத்தான் பண்ணிருக்கேன். ஏதாவது சினிமா ஃபங்ஷனுக்கு போனா, பின்னாடி உக்கார வைச்சிடுவாங்க, அப்பமட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனாலும் நமக்கான நேரம் வரும்னு பொறுமையா காத்திருந்தேன். இப்ப வந்திடுச்சி. ‘என்னை அறிந்தால்’ படத்துல என் கேரக்டர்க்கு தியேட்டர்ல க்ளாப் பண்ணும்போது, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பொறுமைதான் சக்ஸஸ்க்கான கீ போல.’’ வெற்றிபெற்ற சந்தோஷத்தில் சொல்கிறார் அருண்விஜய்.

- இளங்கோ கிருஷ்ணன், குரு அஷ்வின் படம்: கார்த்திக் சீனிவாசன்