Published:Updated:

கல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க!

கல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க!

‘‘திருமணம் என்றவுடன், பட்டுப்புடவைகள், ஆபரணங்கள், அழகு சாதன உபகரணங்கள் என்று

கல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க!

வெளிப்புற அலங்காரத்தில் கவனம் செலுத்துவது மட்டுமே போதாது. உடலின் ஆரோக்கியத் துக்கு அடித்தளம் இடும் பற்களின் மீது கவனம் செலுத்துவது, மிக முக்கியம்!’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் சிறப்பு மருத்துவர், டாக்டர் வித்யா சபரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘திருமணம் நெருங்கும் வேளையில், வாயில் துர்நாற்றம், கறை படிதல், பற்சொத்தை, சென்சிட்டிவ் பிரச்னை, பற்களுக்கிடையே இடைவெளி, எனாமல் பிரச்னை, கம்ஸ் பிளீடிங் என பற்களில் ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மணமக்கள் நிச்சயம் பல் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். ஏனெனில், பற்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளால் ஒருவர் மற்றொருவருடன் பேசுவதில் தயக்கம் ஏற்படும். இணையுடன் நெருங்கும்போது, சமயங்களில் தயக்கம் தாழ்வு மனப்பான்மை வரை இழுத்துச் செல்லும். எனவே, திருமணத்துக்குக் காத்திருக்கும் மணமக்கள் குறைந்தது 6 மாதத்துக்கு முன்பாக பல் மருத்துவரை அணுகவேண்டும். தங்களுக்குள்ள பிரச்னைகளுக்கு ஏற்றவாறு மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ வழிமுறைகளை ஏற்பதுடன், மருத்துவரின் அறிவுரையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம்.

கல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க!

பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய கேலிங் புரொஸீஜர், ப்ளீச்சிங், கம்ஸ் ட்ரீட்மென்ட், லேசர் ட்ரீட்மென்ட், ஸ்மைல் மேக் ஓவர், லாமினேட்ஸ் ட்ரீட்மென்ட் என பல நவீன தொழில்நுட்பங்கள் இன்று மருத்துவத்துறையில் எளிதாகவும், குறைவான செலவிலும் உள்ளன. பின்விளைவுகள் ஏற்படுத்தாத இம்மருத்துவ முறைகள் அனைவராலும் வரவேற்கப்படுகின்றன. சிகிச்சைக்குப் பின்பு குளிர்ந்த மற்றும் கார உணவுகளைத் தவிர்ப்பதுடன், பற்களை குச்சி, ஊசியால் குத்துவது, சாம்பல், எலுமிச்சை, உப்பு இவற்றைப் பயன்படுத்தி பல்துலக்குவது... இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். சாஃப்ட் பிரெஷ் மற்றும் சாஃப்ட் பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது. ஒருநாளைக்கு இருமுறை பல்துலக்குவதும் மூன்று முறை மவுத்வாஷ் செய்வதும் மிகவும் அவசியம்.

பற்கள் தொடர்பான பிரச்னைகளை வீட்டிலேயே சரிசெய்யலாம் என்ற எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. அதேபோல, திருமணத்துக்கு ஒரு வாரம் முன் வந்து, ‘என் பற்களை சரி செய் யுங்கள்’ என்றாலும் இயலாது!’’ என்று சொன்னார் வித்யா சபரி.

பற்களின் ஆரோக்கியம், மண வாழ்க்கையை ‘கூல்’ ஆக்கும்!

- ச.சங்கரேஸ்வரி

படம்: அசோக் அர்ஸ்