Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

‘சோட்டா நவாப்’ சயீஃப் அலி கான், 46 வயது சூப்பர் ஹீரோ. இந்த வயதிலும் இளவரசர் எங்கு சென்றாலும் பட்டாம்பூச்சிகள் வட்டமிடுகின்றன. அவ்வளவு ஃபிட்டான ‘வெல் டோன்டு’ பாடி. ‘முறையாகத் திட்டமிட்ட உடற்பயிற்சியே இதற்குக் காரணம்’ எனச் சொல்கிறார். அப்படி என்னதான் இருக்கிறது இவரது ஜிம் டைம் டேபிளில்?

ஸ்டார் ஃபிட்னெஸ்

• சாப்பிடுவதற்கு முன்பு சூப் குடிப்பது போலத்தான் வார்ம்அப். உடற்பயிற்சியை மிஸ் செய்தாலும், அதற்கு முன்பு வார்ம்அப் செய்ய மிஸ் பண்ணாதீங்க. நம் தசைகளை எழுப்பிவிட்டுச் சொன்னால்தான், அது கேட்கும். வார்ம்அப் என்பது தசைகளுக்கான ‘வேக்அப் கால்’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• உடற்பயிற்சிப் பட்டியலில் புதுப்புது விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பைசெப்ஸுக்கு மட்டுமே 20 விதமான பயிற்சிகள் இருக்கின்றன.  இவற்றை மாற்றி மாற்றிச் செய்யும்போது அலுப்பு தெரியாது. உடற்பயிற்சி செய்வதற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

• நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சி. போரடிக்காது. சருமத்துக்கும் நல்லது. வாரம் ஒரு முறையாவது ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஸ்விம்மிங் ஒரு  ஃப்ரீ ஹிட்.

• நான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். அடிக்கடி டயட் சார்ட்டை மீறி கலோரிகள் உடலில் சேரும். அப்போது எல்லாம் அதிகமான நேரம் ஜிம்மில் கிடப்பேன். மற்றபடி, என் டயட்டில் கொஞ்சம் சிக்கனும் நிறைய ஓட்ஸும் இருக்கும். பச்சைக் காய்கறிகள், நிறையத் தண்ணீர் கட்டாயம் உண்டு.

• என் உயரம் 173 செ.மீ. இந்த உயரத்துக்கு ஏற்றது போல 77 கிலோ மெயின்டெய்ன் செய்வேன். என்  பி.எம்.ஐ சரியாக 25.5. இதை வயதுக்குத் தக்க கவனித்து வருவதால், எப்போதும் இளமையாகவே உணர்கிறேன்.

பாலிவுட்டில், ‘வந்தார்கள்... வென்றார்கள்!’  எனப் பட்டியலிட்டால், கரீனாவுக்கு அட்டகாசமான இடம் நிச்சயம் உண்டு. ஆரம்பத்தில், எடை அதிகமாக, அமுல் பேபியாகத்தான் இருந்தார். பின், அதிரடியாகத் தனது உடலை ஸ்லிம் ஆக்கினார். ஒரு கட்டத்தில் ‘சைஸ் ஜீரோ’ ஒல்லி பெல்லியாக மாற, ரசிகர்கள் ‘நீ எப்படி இருந்தாலும் எங்க டார்லிங்தான்’ என  ஃபீலானார்கள். யோகா குரு பாயல் திவாரிதான் இவரின் உடற்பயிற்சிக்கு கம்ப்ளீட் கைடன்ஸ்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

• என்ன பிசி என்றாலும், கணவர் சயீஃபே அழைத்தாலும், தினமும் இரண்டு மணி நேரம் யோகாவுக்கு

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஒதுக்குகிறார். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற ஒரே வழி யோகாதான் என்பது கரீனாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

• ‘கபூர்’ குடும்பத்தில் பிறந்துவிட்டு, சாப்பாட்டை வெறுக்க முடியுமா? கரீனாவுக்கு சினிமா

ஸ்டார் ஃபிட்னெஸ்

எந்த அளவுக்குப் பிடிக்குமோ, அந்த அளவுக்குச் சாப்பாடும் பிடிக்கும். சமோசா, கச்சோரி என வெளுத்துக்கட்டினாலும், எதையும் அளவோடு சாப்பிடுவார். என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட, எவ்வளவு என்பதை ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்வார். கரீனா, சைவம் என்பது குறிப்பிடத்தக்கது.

• உடற்பயிற்சி அரை மணி நேரம் என்றால், ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி. இதுதான் கரீனாவின்

ஸ்டார் ஃபிட்னெஸ்

சீக்ரெட் வெப்பன். ‘நடப்பதுதான் எளிதான வொர்க் அவுட்’ என்கிறார். சில நாட்களில் பாடல்கள் கேட்டபடி மூன்று மணி நேரம்கூட நடப்பாராம்.

• பைக்கிங், ஸ்விம்மிங் இதுதான் கரீனா கார்டியோ. கணவர் சயீஃபும் ஸ்விம்மிங் பிரியர்

ஸ்டார் ஃபிட்னெஸ்

என்பதால், இருவரும் பெரும்பாலான முக்கிய முடிவுகளை நீச்சல் குளத்தில்தான் டிஸ்கஸ் செய்வார்கள்.

• கரீனாவின் ‘சிக்’ தோற்றத்துக்கு இன்னொரு காரணம், தினமும், 1,200 கலோரிகள் உணவை,

ஸ்டார் ஃபிட்னெஸ்

மூன்று வேளையாகப் பிரித்து உட்கொள்வதுதான். அதே சமயம், அதற்கேற்ற உடற்பயிற்சி செய்து, அதை எரிப்பதும் முக்கியம். “இந்த முறைப்படி செய்தால், பிடித்ததையும் சாப்பிடலாம். எடையையும் பராமரிக்கலாம்.” என்கிறார்.

 - கார்க்கிபவா