Published:Updated:

உடலினை உறுதி செய் - 3

உடலினை உறுதி செய் - 3

உடலினை உறுதி செய் - 3

உடலினை உறுதி செய் - 3

Published:Updated:
உடலினை உறுதி செய் - 3

யோகாவைச் சிறியவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. வயதானவர்களும் யோகா செய்யலாம், அப்படிச் செய்வதால் அவர்களின் பலதரப்பட்ட வலிகள், பிரச்னைகள் குறைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், யோகா பயிற்சியாளர் உதவியோடு மட்டுமே ஆசனங்களைச் செய்ய வேண்டும். இதோ நமக்கான எளிய ஆசனங்கள்...

யோகாவுக்குத் தயாராகும் முன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்களை மூடி, கைகளில் சின்முத்திரை வைத்து (கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொட்டபடி மற்ற விரல்கள் நீண்டிருக்கும் நிலை)  10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். இது யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்ய உதவும்.

உடலினை உறுதி செய் - 3

வஜ்ராசனம் (Vajrasana)

இரண்டு கால்களையும் நீட்டி உட்கார வேண்டும். கைகளை, பின்னால் ஊன்றிக்கொள்ளலாம். இடது காலை முதலில் மடக்க வேண்டும். பிறகு,  வலது காலை மடக்கி, கால்களின் மேல்  அமரும் நிலைக்கு வர வேண்டும். இடது கால் கட்டைவிரலின் மேல், வலது கட்டைவிரல் பதிந்திருக்கட்டும். இப்படி உட்கார முடியாதோர், காட்டன் துணி மேல் காலை வைத்து உட்கார்ந்தால் வலி தெரியாது.  அமர்ந்த நிலையில, இரு கைகளாலும் தொடையின் மேல் சின்முத்திரை வைத்து 5-10 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

உடலினை உறுதி செய் - 3

குறிப்பு: காய்ச்சல், முட்டி வலி, தீவிர முதுகுவலி, வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

பலன்கள்: இந்த ஒரே ஓர் ஆசனம்தான் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடியது. ரத்த ஓட்டம் கால்களுக்குச் செல்லாமல், வயிறு முழுவதும் சீராகச் செல்வதால், செரிமான செயல்பாடு சீராக நடக்கிறது.

இந்த நிலையில் அமர்வதால், இடுப்புப் பகுதி உறுப்புகள் ஆரோக்கியமாகும். பைல்ஸ், இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். குழந்தையின்மை பிரச்னை வராமல் காக்கப்படும். செரிமான சக்தி மேம்படும்.

பாவன்முக்தாசனா (Pawanmuktasana)

தரைவிரிப்பின் மீது படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் உடலுக்கு அருகில் பக்கவாட்டில் தரையின் மேல் பதிந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கால்களை 90 டிகிரிக்கு செங்குத்தாக உயர்த்த வேண்டும். இப்போது, மூச்சை வெளியே விட்டபடி இரு கால்களையும் மடக்கி, கைகளை முட்டியுடன் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

மூச்சை உள்இழுத்தபடியே தலை, தோள்பட்டை, மேல் உடலை முடிந்த அளவுக்கு முட்டி நோக்கிக் கொண்டுவர வேண்டும்.

10 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை விட்டபடியே பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, தினமும் மூன்று முறை செய்யலாம்.

உடலினை உறுதி செய் - 3

குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதுகு வலி, காலில் நரம்பு இழுக்கும் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் மாதவிலக்கு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு சமயத்தில் இதைச் செய்யக் கூடாது. பலன்கள்: மலச்சிக்கல் சரியாகும். செரிமானக் கோளாறுகள் நீங்கும். உடலில் உள்ள கெட்ட வாயு, மலக்காற்று வழியாகப் பிரியும். வாயு தொடர்பான வலி, பிடிப்பு ஆகிய பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறலாம். இடுப்புத் தசைகள் வலுவடையும். மாதவிலக்கு வலி வருவது தடுக்கப்படும். குழந்தையின்மைப் பிரச்னை சரியாகும். வயிறு அழுத்தப்பட்டு, தொப்பை கரையும். ஊட்டச்சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். பெருங்குடல் இயக்கம் சீராகும். செரிமான மண்டலம் தொடர்பான பிரச்னைகள் விலகும்.

உடலினை உறுதி செய் - 3

யோகா முடிந்ததும்...

ஒய்வு: தரை விரிப்பின் மேல் சப்பளங்கால் போட்டு, கைகளில் வணக்கம் வைத்து மூன்று முறை ‘ஆம்’ சப்தம் (ஆஆ... உஉ... ம்ம்...) சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்

- ப்ரீத்தி, படங்கள்: ச.ஹர்ஷினி, மாடல்: நாகேஷ்வரி

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை