Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

பூர் குடும்பத்தில் எல்லோருமே ஒல்லிதான். அந்த வழியில் ரன்பீர் கபூரும் ஆறு அடி உயரத்துக்கு ஏற்ற எடையில், ஸ்லிம்மாகவே இருக்கிறார். இந்தத் தோற்றமே அவருக்கும் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனதால், ஹெவி வொர்க்அவுட் செய்வது இல்லை. ஆனால், தனது உடலைச் சரியாக மெயின்டெய்ன் செய்துவருகிறார். ரன்பீரின் அன்றாட வொர்க்அவுட் டிப்ஸ் மற்றும் டயட் பிளான் இதோ...

ஸ்டார் ஃபிட்னெஸ்

மிஸ் பண்ணாதீங்க: வொர்க்அவுட் என்பது கடன் இல்லை. சேர்த்துவைத்து வட்டியோடு திரும்பக் கட்ட. அன்றைய வொர்க்அவுட்டை, அன்றைக்கே செய்து முடியுங்கள். கேர்ள் ஃப்ரெண்டைப் பார்க்கப் போவதைக்கூட மிஸ் பண்ணலாம். ஆனால், வொர்க்அவுட்டை மிஸ் பண்ணக் கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டயட்: காலையில் வாழைப்பழம், முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் பிரவுன் பிரெட். மதியம் சப்பாத்தி மற்றும் தால். முடிவில், ஒரு கப் தயிர். இரவில் அசைவ உணவு. கிரில்டு சிக்கன் அல்லது மீன். இதுதான் தினசரி  மெனு.

சரியா சாப்பிடுங்க: ப்ரேக்ஃபாஸ்ட்தான் ஒரு நாளின் முக்கியமான உணவு. அதில் கவனம் எடுக்க வேண்டும் என்பது என் ஃபுட் தந்த்ரா. காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. சமையலில் ஆலிவ் எண்ணெய் சேருங்கள். அசைவம் வேண்டும் என்றால், கிரில்டு ஐட்டங்களைச் சாப்பிடலாம்.

ரெஸ்ட்... ரெஸ்ட்: வொர்க்அவுட் என்பது நாம் வயிற்றுக்குள் சாப்பாட்டைத் திணிப்பது போன்றது. அது செரிக்கக் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அது போலத்தான் உடலுக்கு ஓய்வும். ரிலாக்ஸாக ஓய்வு எடுப்பது, நம் வொர்க்அவுட்டை சரியான சக்தியாக மாற்ற உதவும்.

விளையாடுங்க: சிலருக்கு வேலை பிஸியில் ஜிம் பயிற்சிகளைச் செய்ய முடியாது. அதனால், ஏதாவது ஒரு விளையாட்டையோ மார்ஷியல் ஆர்ட்டையோ உங்கள் வொர்க்அவுட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். எதுவுமே முடியவில்லை என்றால், வார்ம்அப் பயிற்சிகளை மட்டுமாவது செய்வது நல்லது.

ஸ்டார் ஃபிட்னெஸ்

ங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த பாலிவுட் பியூட்டி கத்ரீனா கைஃப், மேக்கப் இல்லாமல் பார்த்தாலும் அசரடிக்கும் அழகுப் புயல். அதிகம் ஜிம்முக்குப் போகாமல், சாப்பாட்டில் கவனமாக இருந்து, தனது ஃபிட்னெஸைப் பராமரிப்பவர். ஃபிட்னெஸ், பியூட்டி, டயட் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எக்ஸ்பர்ட் வைத்திருக்கும் இவரது அழகின் ரகசியம் என்ன?

தூக்கம்: முன்பு எல்லாம் பார்ட்டி, ஷூட்டிங் என தினமும் 12 மணிக்கு மேல்தான் தூங்குவார். இப்போது 30 வயதைத் தாண்டிவிட்டதால், குறித்த நேரத்துக்குப் படுக்கைக்குச் சென்றுவிடுகிறார். நல்ல தூக்கம், அடுத்த நாளை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் என்பதை உணர்ந்து சொல்கிறார் கத்ரீனா.

ஸ்விம்மிங்: எக்ஸ் பாய் ஃப்ரெண்ட் சல்மான் கான் சொல்லித்தந்த சீக்ரெட் டிப்ஸ் இது.

யோகா: யோகா கத்ரீனாவின் ஃபேவரைட். தனது ஸ்லிம் உடலுக்கும் சரும அழகுக்கும் காரணம் என்பதைத் தாண்டி, யோகா தன்னை மனரீதியாகவும் அமைதியாக வைத்திருக்கிறது என்கிறார். அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்!

டயட்: கத்ரீனாவின் டயட்டில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவையே எடுத்துக்கொள்வார். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை பழங்கள் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் நான்கு டம்ளர் தண்ணீர் குடித்துவிடுவார்.

ஜாகிங்: ஜிம்முக்குள் அடைந்து வொர்க்அவுட் செய்வதைவிட பல கி.மீகூட ஓடிவிடுவார் கத்ரீனா. கலோரிகளை எரிக்க, பெரும்பாலும் ரன்னிங், ஜாகிங் மற்றும் கார்டியோ எக்ஸர்சைஸ்தான் செய்வார்.

- கார்க்கிபவா