Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

Published:Updated:

ச்சின், தோனிக்கு அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களில் முக்கியமானவர் ரோஹித் ஷர்மா. ஆனால், 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறவில்லை. அதன் பின் கிடைத்த வாய்ப்புகளில் ரன் மெஷினாகவே மாறினார். இன்று, இந்தியாவின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரங்களில் ரோஹித் ஒருவர். ‘மூன்று மாதங்கள் ஃபிட்னெஸுக்காகக் கூடுதல் கவனம் எடுத்தேன். அதனால்தான் இப்போது என்னால் சிரமம் இன்றி ரன் குவிக்க முடிகிறது. இப்போ என் மனசும் உடலும் ஃபிட்’ என்கிறார் ரோஹித்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

• எடை குறைத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரோஹித்துக்கு ஏற்பட்டது. அப்போது ஜிம்முக்குள் வந்தால், மூன்று மணி நேரமாவது பயிற்சிகள் செய்வார். அடிப்படை உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப்ஸ், லெக் ரெய்ஸ் மூலமே எடையைக் குறைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமான ஒன்றுதான் என்றாலும் அவரவர் புரொஃபஷனுக்கு ஏற்றதுபோல கவனம் செலுத்த வேண்டும். ரோஹித்தின் ஃபுட் வொர்க் பிரபலம். அதை இன்னும் மெருகேற்ற, கால்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை நிறையச் செய்கிறார்.

• ‘நமக்குத் தேவையான மாற்றத்தை நாம்தான் கொண்டு வர வேண்டும். எவ்வளவு கஷ்டம் என்றாலும் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையேல், தோல்வி நமக்குத்தான். யார்தான் தோற்க விரும்புவார்கள்? எனவே, உடற்பயிற்சிக்கும் கோல் வைத்துக்கொள்ளுங்கள். அதை ஃபாலோ செய்யுங்கள்’ என்கிறார் ரோஹித்.

• குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளைத் தான் பல வருடங்களாக உட்கொள்கிறார் ரோஹித். ‘கார்போ அளவு குறைந்தால், நல்ல கொழுப்பு மட்டுமே உடலில் சேரும்’ என்பது ரோஹித்தின் அனுபவப் பாடம். ‘எந்த டயட்டைவிடவும் இது நல்ல பலன் அளிக்கும்’ என்கிறார்.

• ‘வேறு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை என்றால், ஷூக்களை மாட்டிக்கொண்டு ஓட ஆரம்பிக்கலாம். வொர்க்அவுட்டில் கிடைக்கும் எல்லா பலன்களும் ஓட்டப் பயிற்சியிலும் உண்டு. முறையான வார்ம் அப் மட்டும் போதும். ஓடிக்கொண்டே இருக்கலாம்’ என்கிறார் ரோஹித்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

‘பாட்மின்டனைப்போல உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டு எதுவும் இல்லை’ என்பார்கள். இதில் தொடர்ந்து ஜொலிப்பது என்பது அசாத்தியக் காரியம். அதை அசத்தலாகச் செய்கிறார் சாய்னா நேவால்.

• ‘உடற்பயிற்சியோ விளையாட்டுப் பயிற்சியோ, எதையும் தொடர்ந்து செய்வதன் மூலமே அதன் பலன்களை அனுபவிக்க முடியும்’ என்பது சாய்னாவின் நம்பிக்கை. அதனால், எந்த நாளும் உடற்பயிற்சிகளைத் தவறவிட மாட்டார். போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ, சாய்னாவின் காலைப் பொழுது ஜிம்மில்தான் விடியும்.

• பாட்மின்டன் வீரர்களுக்கு ஸ்டாமினா முக்கியம் என்பதால், ரன்னிங், ஜாகிங், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் சாய்னாவின் வொர்க்அவுட் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறும். வலிமையான கால்கள்தான் சாய்னாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

• காலையில் உடற்பயிற்சி என்றால், இரவில் ‘யோக நித்ர’ இல்லாமல் அன்றைய நாள் நிறைவு பெறாது. மன மற்றும் உடல் அழுத்தங்களைப் போக்கி, நிம்மதியான உறக்கத்துக்கு இந்த யோகா உதவுகிறது. நிம்மதியான தூக்கம்தான் ஒருவரின் ஃபிட்னெ்ஸுக்கான அடிப்படையான விஷயம்.

• விளையாட்டு வீரர் என்பதால், நிறைய விளம்பரங்கள் சாய்னாவைத் தேடி வருகின்றன. அதனால், சருமத்தையும் பாதுகாத்தாக வேண்டும். அதற்கு, நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ‘நிறையப் பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்’ என்கிறார்.

• ‘உடற்பயிற்சியை ஒரு வேலையாக நினைத்தால், ஒரு நாளும் அதைத் தொடர முடியாது. வாழ்வின் ஓர் அங்கமாக நினைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் பாட்மின்டனே விளையாட முடியாது என்பதை உணர்ந்தால், தானாக ஜிம்மில் வேலை நடக்கும்’ என்கிறார் இந்த பாட்மி்ன்டன் குயின்.

- கார்க்கிபவா