வயிற்றைத் தட்டையாக வைத்து இருக்க, எத்தனையோ பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. தட்டையான வயிறு என்பதுதான் பலரது விருப்பமும்... அதுதான் ஆரோக்கியமும்கூட. இதற்கு ஸ்கிப்பிங், ரோப் பயிற்சிகள் போன்றவையும் உதவும். வெறும் ஐந்து நிமிடங்களில் பலனளிக்கும் சிறப்புமிக்க, எளிய ஆசனம் இங்கே...

அர்த்த சலாபாசனம்

தரை விரிப்பின் மேல், குப்புறப் படுக்க வேண்டும். கையை மடித்து, முன்பக்கம் வைக்க வேண்டும். தலையை அதன் மீது வைக்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, கைகளை உடலின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். தாடை தரையில் பதிந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, வலது காலை மடிக்காமல், முடிந்த வரை உயர்த்த வேண்டும். முடிந்த அளவுக்கு மூச்சை அப்படியே இழுத்தபடி இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதேபோல, இடது காலை உயர்த்தி கீழே இறக்க வேண்டும்.

குறிப்பு: உயர் ரத்த அழுத்தம், குடல் இறக்கம், ஆஸ்துமா உள்ளவர்கள், இதைத் தவிர்க்கலாம்.

பலன்கள்

முதுகு வலி, டிஸ்க் பிரச்னை சரியாகும். தொடை, இடுப்பு, வயிற்றைச் சுற்றி உள்ள தேவையற்ற சதை கரையும். தொப்பை் குறைந்துவிடும். உள்ளுறுப்புகள் வலிமை பெறும். முதுகெலும்பின் வளைவுத்தன்மை அதிகரிக்கும். கர்ப்பப்பை, சினைப்பை பலம் பெறும்.

மலச்சிக்கல் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

யோகாவுக்குத் தயாராகும் முன், கண்களை மூடி, கைகளில் சின் முத்திரை வைத்து, 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும்.

`மக்ராசனம்’ என்பது ரிலாக்ஸிங் போஸ், படுத்து உறங்கும் நிலை. அர்த்த சலாபாசனம் செய்யும் முன்னர், வயிறு நன்றாகத் தரையில் படியும்படி படுத்து, 10 முறை மூச்சை நன்றாகவிட்டு, ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

யோகா முடிந்ததும், சப்பளங்கால் போட்டு அமர்ந்து, கைகளைக் கூப்பியபடி, மூன்று முறை ‘ஆம்’ சப்தம் சொல்லி, ‘சாந்தி... சாந்தி... சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து முடிக்க வேண்டும்.

- ஆரோக்கியக் கலை அறிவோம்

- ப்ரீத்தி,

படங்கள்: மா.பி.சித்தார்த், மாடல்: ஸ்ருதி

உதவி: ட்ரைமெட் மருத்துவமனை