உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பௌலர் நம்ம அஷ்வின். தொடர்ந்து போட்டிகள், அதற்கான பயணங்கள் என பிஸியாகவே இருந்தாலும், எப்படி அஷ்வின் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்?

“கிரிக்கெட் போட்டிகள் உலக அளவில் பல நாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சீதோஷ்ண நிலை இருக்கும். எனவே, அதற்கு ஏற்ப உடற்பயிற்சிகளை மாற்றுவது அவசியம். நாம் செய்யும் பயிற்சிகள் எதற்காக, நம் உடலில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற புரிதலோடு பயிற்சிகள் செய்வது நலம்.”

“கடைசி நேரத்தில் படித்தால், பாஸாக முடியும். ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுக்க முடியாது என்பது போலத்தான் ஃபிட்னெஸும். ஒரே நாளில் உடலை ஃபிட்டாக மாற்றிவிட முடியாது. வருடம் முழுவதுமே அதற்கான முயற்சிகளும் பயிற்சிகளும் தேவை.”

“ஓட்டப்பந்தய வீரருக்குக் கால்கள் அவசியம், நீச்சல் வீரருக்குக் கைகள் எளிதாக இயங்க வேண்டும். அதுபோல, அவரவர் விளையாட்டுக்குத் தேவையான பயிற்சிகளைக் கண்டறிந்து வொர்க்அவுட் செய்வதுதான் நல்லது.”

``விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டாமினா முக்கியம். அதற்கு, ஓட்டப்பந்தயம் மிக முக்கியமான பயிற்சி. அதை மட்டும் விடாமல் செய்வதே ஆரோக்கியமான விஷயம்.’’

“கிரிக்கெட் என்பது நாள் முழுவதும் விளையாடப்படுவது. எனவே, சிறிய இடைவெளியில் உணவு உட்கொள்வது அவசியம். அதை மனதில்வைத்து மற்ற நாட்களிலும் டயட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களின் வெற்றி 50 சதவிகிதம் அவர்களது டயட்டில்தான் இருக்கிறது.”

பாட்மின்டன் விளையாட்டின் இளவரசி பி.வி.சிந்து. தொடர் வெற்றிகள் இவரைப் பின்தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதிக எனர்ஜி தேவைப்படும் விளையாட்டான பாட்மின்டனுக்கு எப்படித் தயார்படுத்திக்கொள்கிறார் சிந்து?

சிந்துவின் உயரம் ஐந்து அடி 11 அங்குலம். அதற்கு ஏற்ற உணவை அவர் உட்கொண்டே ஆக வேண்டும். இதை மிகுந்த கவனத்துடன் பின்பற்றுகிறார். ``டயட் என்ற பெயரில் எல்லோருக்கும் ஒரேவிதமான டயட் சார்ட் பயன் அளிக்காது. பொதுவான டயட்டைப் பின்பற்றுவதைவிட, உணவியல் நிபுணரைக் கலந்து ஆலோசித்து, அவரவர்க்குத் தேவையான மிகச் சரியான டயட் சார்ட் தயாரித்து, பின்பற்றுவது அவசியம்” என்கிறார்.

“தனது எல்லா வெற்றிகளுக்கும் பயிற்சியாளர் கோபிசந்த்தான் காரணம்” என்கிறார் சிந்து. ஆனால், கோபிசந்தோ ‘`திட்டமிட்ட வொர்க்அவுட்களும், அதை முறையாகப் பின்பற்றுவதுமே சிந்துவின் வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார்.

சிந்துவின் இடுப்புக்குக் கீழ் பகுதிகளும் தசைகளும் இன்னும் கடினமாக வேண்டும் எனக் கண்டறிந்த ஃபிட்னெஸ் குழு, அதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகளைத் தந்தார்கள். இதனால், சிந்துவால் வெகு நேரம் சோர்வடையாமல் விளையாட முடிகிறது.

கடந்த மூன்று வருடங்களாகத் தினமும் காலை நான்கு மணி முதல் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் ``எந்தப் பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், நம் உடல் நாம் சொல்வதைக் கேட்கும்” என்கிறார்.

“எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு தேவை. எனவே, யோகா, தூக்கம் போன்றவற்றோடு இசை கேட்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.நல்ல இசையோடு கண்களை மூடி, ஓய்வு எடுப்பதும் உடற்பயிற்சிதான்” என்கிறார் இந்த யங் சாம்பியன்.

- கார்க்கிபவா