Published:Updated:

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஃபிட்னெஸ்

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஃபிட்னெஸ்

Published:Updated:
ஸ்டார் ஃபிட்னெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் ஃபிட்னெஸ்

ஹாலிவுட் ஆக்‌ஷன் ராணி ஏஞ்சலினா ஜோலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `வாண்டட்’, `சால்ட்’ போன்ற படங்களுக்காக ஜிம்மே கதி எனக் கிடந்தவர் ஏஞ்சலினா. பிராட் பிட்டின் நிஜ வாழ்க்கை ஜோடிக்கு இது சிரமமா என்ன?

ஃபிட்டான உடல், ஹெல்த்தியான லைஃப் ஸ்டைல் இந்த இரண்டுக்கும் ஏஞ்சலினா முதலில் நம்புவது யோகா. தசைகளை முறுக்கேற்றும் ஸ்பெஷல் யோகா அவரின் டாப் சாய்ஸ். “எல்லா மனஅழுத்தங்களையும் யோகாவால் எட்டி உதைத்துத் தள்ள முடியும்’’ என்கிறார் இந்த ஐந்தடி எட்டு அங்குல அழகி.

தன் உடலை, விரும்பிய ஷேப்புக்குக் கொண்டுவருவது ஏஞ்சலினாவுக்குக் கைவந்த கலை. அந்தந்தத் தசைகளைத் தேர்வுசெய்து, முறையான பயிற்சிகளை மேற்கொள்வார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப, தன்னை மாற்றிக்கொண்டு வந்து நிற்பதால்தான் இந்த வயதிலும் சூப்பர்ஸ்டார் ஆக இருக்கிறார் ஏஞ்சலினா.

யோகாவைப்போல, கிக் பாக்ஸிங் பயிற்சிகளும் மார்ஷியல் ஆர்ட்ஸும் `செம வொர்க்அவுட்’ என்பது ஏஞ்சலினா வாக்கு. ‘`கிக் பாக்ஸிங் ஸ்டாமினாவையும் பலத்தையும் கூட்டுவதோடு, கலோரியை எரிக்க ஜாலியான வழியும்கூட’’ என்கிறார்.

ரெட் மீட்டும் (மாடு, ஆட்டு இறைச்சி) கோதுமையும் ஏஞ்சலினா மெனுவிலேயே கிடையாது. காய்கறிகள், பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர்தான் முக்கிய ஐட்டங்கள். புரோட்டினுக்காகச் சிறிது இறைச்சி எடுத்துக்கொள்வார். கார்போஸ் (மாவுச்சத்து) எப்போதாவது சக்திக்காக எடுப்பது உண்டு.

ஏஞ்சலினாவின் பிரத்யேக ட்ரெய்னரான கன்னர் பீட்டர்சன் ``கார்டியோ பயிற்சிகளாக இருந்தாலும் தினம் தினம் அதைப் புதிதாகச் செய்ய விரும்புவார் ஏஞ்சலினா” என்கிறார். “சிக்ஸ்பேக், எயிட்பேக் என்பதற்காக உழைப்பவர்களைவிட, ஃபிட்னெஸ் பயிற்சிகளை ரசித்துச் செய்பவர்களே அதை எளிதில் அடைய முடியும். ஏஞ்சலினாவின் பொழுதுபோக்கே ஜிம் தான்” என்கிறார் பீட்டர்சன்.

ஸ்டார் ஃபிட்னெஸ்

ஹாலிவுட்டின் `டிரீம் பாய்ஸ்’ பட்டியலில் எப்போதும் பிராட் பிட்டுக்கு ஸ்பெஷல் இடம்தான். 52 வயதிலும் அவருக்கு ரசிகைகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் அவரது ஃபிட்டான உடலும்தான். `ஃபைட் கிளப்’ படத்தில், பிராடின் சிக்ஸ்பேக் மீதுதான் எல்லோர் கண்ணும். அதன் பின்னர் ‘ஃபைட் கிளப் வொர்க்அவுட்’ என்றே ஒன்று பிரபலமானது. அது என்ன ஸ்பெஷல் வொர்க்அவுட்?

தினமும் ஒவ்வொரு தசை எனப் பிரித்து, அதற்கு மூன்று உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதை, 15 செட்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு செட்டுக்கு இடையேயும் 60 விநாடிகள் இடைவெளிவிட வேண்டும்.
 
ஒவ்வொருவரின் உடல் பலத்துக்கும் ஏற்ப பயிற்சிகளை எடுக்க வேண்டும். எனவே, வொர்க்அவுட்டின் எடையை, 15 செட்கள் செய்ய முடிகிற அளவில் ஃபிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

திங்கள்கிழமை மார்புப் பயிற்சிகள். 25 புஷ்அப்ஸ், பென்ச் பிரெஸ் மற்றும் செஸ்ட் பிரெஸ். செவ்வாய்க்கிழமை பேக் டே. புல்அப்ஸ், டி-ரோ போன்ற முதுகுப் பயிற்சிகள்.

புதன், தோள்களுக்கான தினம். அர்னால்ட் பிரெஸ், ஃப்ரன்ட் ரெய்ஸ் போன்ற பயிற்சிகள். வியாழன் பைசெப்ஸ் மற்றும் டிரைசெப்ஸ் தினம். அதற்கான புஷ்அப்ஸ் மற்றும் இதரப் பயிற்சிகள். வெள்ளிக்கிழமை கார்டியோ. சனி மற்றும் ஞாயிறு ஓய்வு.

இப்படி, ஒவ்வொரு தசையாகத் தேர்வுசெய்து முறையாக வொர்க்அவுட் செய்தால், அதிகப் பலன் கிடைப்பதாக, பிராட் பிட் சொல்கிறார். இதற்கான டயட்டும் எளிமையானவையே. தினம் மூன்று வேளை உண்பதைப் பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆறு முறை உண்ண வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கார்க்கிபவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism