Published:Updated:

நோ வொர்க்அவுட்... ஒன்லி மார்ஷியல் ஆர்ட்!

நோ  வொர்க்அவுட்... ஒன்லி  மார்ஷியல்  ஆர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
நோ வொர்க்அவுட்... ஒன்லி மார்ஷியல் ஆர்ட்!

-ரித்திகா சிங்

நோ வொர்க்அவுட்... ஒன்லி மார்ஷியல் ஆர்ட்!

-ரித்திகா சிங்

Published:Updated:
நோ  வொர்க்அவுட்... ஒன்லி  மார்ஷியல்  ஆர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
நோ வொர்க்அவுட்... ஒன்லி மார்ஷியல் ஆர்ட்!

‘இறுதிச்சுற்று’ படத்தில் ஒற்றைக் கையால் புஷ்அப் செய்வது, அம்மாம் பெரிய டயரைத் தூக்கிப் போட்டு பயிற்சி செய்வது, வண்டியை இழுத்துக்கொண்டு ஓடுவது, பாக்ஸிங் பேக்கில் பஞ்ச் செய்வது எனக் கடுமையான பயிற்சிகளை ஜஸ்ட் லைக் தட் செய்து அசத்திவிட்டார் ரித்திகா சிங். அபாரமான எக்ஸ்பிரஷன்ஸ், அட்டகாசமான பாடிலாங்வேஜ் என ‘மதி’யாகவே மாறிய ரித்திகா, ரீலில் மட்டும் அல்ல; ரியலாகவும் ஒரு பாக்ஸிங் பியூட்டி. செம எனர்ஜியோடு படபடவெனப் பேசுகிறார்.

 “எங்களோடது சின்ன குடும்பம். நான், அம்மா, அப்பா, தம்பி அவ்ளோதான். மூணு வயசுல இருந்து கராத்தே கத்துக்க ஆரம்பிச்சேன். என் அப்பாதான் எனக்கு குரு. அப்பா ஒரு ஜிம் நடத்துறார். எப்பவும் செம  ஃபிட்டா  இருப்பார். அவரைப் பார்த்துத்தான் நானும் ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன்.”

நோ  வொர்க்அவுட்... ஒன்லி  மார்ஷியல்  ஆர்ட்!

“ஃபிட்னெஸுக்காக ஜிம்மே கதி என்று இருப்பவரா நீங்கள்?”

“இல்லை. அப்பா நடத்தும் ஜிம்மில் மார்ஷியல் ஆர்ட்ஸும், அதற்கான பயிற்சிகளும் தருவாங்க. பொதுவா, இந்தத் தற்காப்புக் கலைகளைத் தொடர்ந்து செய்தாலே  போதும், உடம்பு, மனசு, புத்தி எல்லாம் ஃபிட்டாகும் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.”

“தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்வீங்க?”

“தினமும் காலையில் ஏழு மணிக்கு ஜிம்முக்குச் சென்று ஒரு மணி நேரம் பயிற்சி செய்வேன். இதுவே, போட்டிகளுக்குத் தயார் ஆகணும்னா காலை ஐந்து மணிக்கெல்லாம் பிராக்டிஸ் ஆரம்பிச்சிடுவேன். சின்ன வயதில் இருந்தே கராத்தே, கிக் பாக்ஸிங் செய்வதால் இயற்கையாகவே இந்த உடல்வாகு அமைஞ்சது.”

“மைண்ட் ரிலாக்ஸ்க்கு என்ன செய்றீங்க?”

“என் மொபைலில், வரைவதற்கு ஒரு ஆப் இருக்கு. ரொம்பக் கஷ்டமா, சவாலா, ஃபன்னா இருக்கும். அதில் என் போட்டோவை நானே வரையறது ரொம்பப் பிடிக்கும். அது எனக்கு ரிலாக்ஸ் தருது. கவனத்துடன் நுணுக்கமாகச் செய்யும்போது மூளைக்கும் நல்ல பயிற்சி. தவிர, செம டான்ஸ் ஆடுவேன். பாட்டுப் பாடுவேன். கல்லூரியில் டான்ஸ், பாட்டு, ஸ்போர்ட்ஸ்னு கலந்துக்குவேன். நான் நேஷனல் லெவல் சாம்பியன் பட்டம் வாங்கியிருக்கேன்.”

“உணவுப் பழக்கங்கள் பற்றி சொல்ல முடியுமா?”

  “நார்மல் தான். அம்மா நல்லா ரொட்டி செய்வாங்க. எந்த உணவுக்கும் அதிகமா எண்ணெய் சேர்க்காம செய்வாங்க. நாங்க மசாலா உணவுகளை ரொம்பவும் குறைவா பயன்படுத்துவோம். சுத்தம் இல்லாத, ஆரோக்கியம் இல்லாத உணவுகளைச் சாப்பிடவே மாட்டேன். பீட்சா, பர்கர், அசைவ உணவுகள், அரிசி சாதம் எல்லாம் பிடிக்கும்தான். ஆனா என் லிமிட் எனக்குத் தெரியும். எப்போதும் வீட்டு சாப்பாடுதான். அதனால, எங்கே போனாலும் வீட்டில் செய்த உணவை எடுத்துச் செல்வேன். நிறைய சுண்டல், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், வேகவைத்த காய்கறிகள், நட்ஸ்னு சாப்பிடுவேன்.”

“அழகுக்காக ஸ்பெஷல் கவனம் ஏதாவது?”


“பியூட்டிக்கு அதிகம் அக்கறை காட்டினது இல்லை. உண்மையைச் சொல்லணும்னா இதுவரைக்கும் நான் பியூட்டி பார்லர்க்குப் போனதே கிடையாது. ஹெல்த்தி ஃபுட் மற்றும் டெய்லி எக்சர்சைஸ் செய்வதாலோ என்னவோ, எனக்கு இயற்கையாகவே நல்ல சருமமும் கூந்தலும் இருக்கு. அதற்கு எல்லாம் தனியாக கேர் எடுத்தது இல்லை. முதல் படத்துல மாய்ஸச்்சரைசர்கூட போடவில்லை. க்ரீம், பவுடர் எதுவுமே போட்டது இல்லை. என்னை எல்லோருக்கும் பிடிக்குதாங்கிறது எனக்கு முக்கியம் இல்லை. என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதான் ரித்திகா!”

- பி.கமலா